எனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி... மன்னிப்பு கேட்க முடியாது

எனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, எனது பெயர் ராகுல் காந்தி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய பிரதமர் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 14, 2019, 01:50 PM IST
எனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி... மன்னிப்பு கேட்க முடியாது title=

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாரத் பச்சாவ் (இந்தியாவை காப்பாற்றுங்கள்) பேரணியை காங்கிரஸ் (Congress) ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேரணியில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி வாத்ரா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். பாரதத்தை காப்போம் பேரணியில் உரையாற்றி வரும் முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க எனது பெயர் ராகுல் சவார்கார் இல்லை. நான் ராகுல்காந்தி என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பாரதத்தை காப்போம் பேரணியில் ராகுல் காந்தி பேசியது, 

>> "ரேப் இன் இந்தியா" விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக என்னிடம் கூறியது, ஆனால் எனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, எனது பெயர் ராகுல் காந்தி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய பிரதமர் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

>> பணமதிப்பிழப்பு பிரச்சினையை பற்றி பேசிய ராகுல், "கறுப்புப் பணத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று மோடி ஜி மக்களிடம் பொய்களை கூறினார். பொது மக்களின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து, அதானி மற்றும் அனில் அம்பானிக்கு கொடுத்தார் என கடுமையாக பிரதமர் மோடி மீது விமர்சனத்தை வைத்தார்.

>> சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ஜிடிபி 9% வரை இருந்தது. அப்போது பொருளாதாரத்தில் சீனாவுடன் இந்தியா போட்டி போட்டு வந்தது. ஆனால் இன்று வெங்காயத்திற்கு மக்கள் கையேந்தி தெருவில் நிற்கிறார்கள்.

>> இந்திய மக்களிடம் பல பொய்களை கூறியதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி கூறினார். 

>> எதிரிகள் நம்மை அழிக்கவில்லை. பிரதமர் மோடி தான் அதனை செய்துள்ளார்

>> எத்தனை விவசாயிகள் இறந்துள்ளார்கள் என்று மோடி அரசு தெரியாது. அவர்களுக்கு விவசாயிகளைப் பற்றி எந்தவித கவலையும் இல்லை. பெரும் முதலாளிகளைப் பற்றி மட்டுமே அவருகளுக்கு கவலை என்றார்.

>> எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 

>> வடகிழக்கு மாநிலங்களை பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அங்கு போராட்டம் நடைபெற்ற முக்கிய காரணம் மத்திய அரசு தான்.

பாரதத்தை காப்போம் பேரணியில் உரையாற்றிய பிரியங்கா காந்தி வாத்ரா, "இந்தியாவை காப்பாற்ற நாடு முழுவதும் இருந்து மக்கள் இன்று கூடியுள்ளனர்" என்றார். மோடி அரசு இருந்தால் வெங்காயம் ரூ.100 கிலோ ஆவது சாத்தியம். பாஜக இருந்தால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை சாத்தியமாகும். பாஜக இருந்தால் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள முடியும் என கடுமையாக சாடினார்.

மேலும் பேசிய அவர், பாஜக இருந்தால், இதுபோன்ற அரசியலமைப்புக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவார்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் குரலை உயர்த்துங்கள். நீங்கள் இந்த நாட்டை நேசிக்கிறீர்கள். உங்கள் குரல் நாட்டை நேசிக்கும் குரலாக இருக்கட்டும். நாம் குரலை எழுப்பவில்லை என்றால், அமைதியாக இருந்தால் நமது அரசியலமைப்பு முடிவுக்கு வரும் எனக் கூறினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News