வருமான வரி ஸ்லாப்: மக்கள் பணம் ஈட்ட பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். அலுவலக வேலை, தினப்படி வேலை, வணிகம் என பல வழிகளில் மக்கள் வருவாய் ஈட்டுகிறார்கள். இந்த வருமானத்திற்கும் மக்கள் வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வருமான வரி செலுத்த வேண்டும். ஒருவரின் ஒரு வருட வருமானம், வரி வரம்பை தாண்டினால், அந்த நபர் வரி செலுத்த வேண்டும். ஆனால் வருமான வரி செலுத்தும் போது பல வகையான விலக்குகளும் கிடைக்கும். உங்கள் வருமானத்திற்கு வரி விதிக்கப்பட்டாலும், நீங்கள் இந்த விலக்கைப் பயன்படுத்தி வரி செலுத்துவதிலிருந்து விடுபடலாம்.
வருமான வரி
தற்போது நாட்டில் இரண்டு வரி அடுக்குகள் உள்ளன. அந்த வரி அடுக்குகளின்படி, மக்களின் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. வெவ்வேறு வருமான குழுக்களுக்கு வெவ்வேறு வரி அடுக்குகள் உள்ளன. பொதுவாக, ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவது தொடங்கும், இருப்பினும், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திலும் விலக்கு பெறலாம்.
நாட்டில் புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறை என இரண்டு வரி அடுக்குகள் உள்ளன. இரண்டு வரி முறைகளிலும், வெவ்வேறு வருமானங்களுக்கு வெவ்வேறு விகிதங்களில் வரி செலுத்துவதற்கான ஏற்பாடு உள்ளது. இருப்பினும், இரண்டு வரி அடுக்குகளிலும், மக்கள் ஆரம்பத்தில் தள்ளுபடியும் (ரிபேட்) பெறுகிறார்கள்.
இன்கம் டாக்ஸ் ஸ்லாப்
60 வயதுக்குட்பட்ட ஒருவர் பழைய வரி முறைப்படி வரி தாக்கல் செய்தாலோ அல்லது புதிய வரி விதிப்பின்படி அனைத்து வயதினரும் வரி தாக்கல் செய்தாலோ, அவர்கள் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி செலுத்த வேண்டும். எனினும், 5 லட்சத்திற்கும் குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ நிகர வரி விதிக்கக்கூடிய வருமானம் கொண்ட நபர், பிரிவு 87A இன் கீழ் வரி விலக்கு பெற முடியும். அதாவது, அத்தகைய நபர்கள் ரூ.5 லட்சம் வருமானம் வரை, புதிய வரி முறை படியோ அல்லது பழைய வரி முறையின் அடிப்படையிலோ எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.
வருமான வரி அடுக்கு விகிதம்
பிரிவு 87A என்பது 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்க அனுமதிக்கும் ஒரு சட்ட ஏற்பாடு ஆகும். 2013 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் மூலம் செருகப்பட்ட இந்த பிரிவு, குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே வருமானம் உள்ள தனிநபர்களுக்கு வரிச் சலுகை அளிக்கிறது. இந்தியாவில் வசிக்கும், ரூ.5,00,000க்கு மிகாமல் வருமானம் உள்ள அனைவரும் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று பிரிவு 87A கூறுகிறது. மொத்த வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள தனிநபர்களுக்கு முழு வரி விலக்கு கிடைக்கும். இந்த விலக்கு தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு பொருந்தாது. மேலும் இந்த விலக்கின் கணக்கீடு 4% சுகாதார மற்றும் கல்வி செஸ் ஆகியவற்றை சேர்ப்பதற்கு முன் செய்யப்படுகிறது.
வருமான வரி
2003 -ல் நிதிச் சட்டத்தில் பிரிவு 87A அறிமுகப்படுத்தப்பட்டதது. அது பலமுறை திருத்தப்பட்டது. தற்போது, வரி செலுத்தும் ஒருவர் இந்தியாவில் வசித்து, அவரது ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், அவருக்கு வருமான வரியில் ரூ.12,500 தள்ளுபடி கிடைக்கும். ரூ.5 லட்சம் ஆண்டு வருமானத்துக்கு கட்ட வேண்டிய வரித் தொகையும் வரித் தொகையும் ரூ.12500 ஆகும். இத்தகைய சூழ்நிலையில், இந்த தள்ளுபடியின் மூலம், மக்களின் மொத்த வருமான வரி ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த வரம்பை மீறினால், பிரிவு 87A இன் கீழ், வரி செலுத்தும் நபர் விலக்கு கோரும் உரிமையை முற்றிலும் இழக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ