நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா விலக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமை அறிவித்தது.
இதுகுறுத்து BCCI வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடுகையில்., "அவர் லண்டனுக்குப் பயணம் செய்தார், மேலும் NCA தலைமை பிசியோ ஆஷிஷ் கௌசிக் உடன் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் அல்லிபோனின் ஆய்வுக்காக இருந்தார். ஹார்டிக் முழு போட்டித் திறனை மீண்டும் பெறும் வரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெறுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்ட்யா சமீபத்தில் ஒரு தேசிய மறுபிரவேசம் செய்வதற்கான முயற்சியில் உடற்பயிற்சி சோதனையில் தோல்வியடைந்தார், மேலும் அவர் நியூசிலாந்துக்கான இந்தியா A சுற்றுப்பயணத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. பாண்ட்யா-வுக்கு பதில் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இரண்டு 50-ஓவர் விளையாட்டு, மூன்று List A விளையாட்டு மற்றும் ஹோம் A அணிக்கு எதிராக இரண்டு நான்கு நாள் ‘டெஸ்ட்’ ஆகியவை அடங்கும்.
BCCI தலைவர் சவுரவ் கங்குலியும் ஹார்டிக் தனது முதுகு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து முழு உடற்திறன் அடையவில்லை என்பதையும், முழு உடற்தகுதிக்கு திரும்புவதற்கு நேரம் தேவை என்பதையும் வெளிப்படுத்தியிருந்தார். “அவரால் இப்போது விளையாட முடியாது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றார், நலம் பெற சிறிது நேரம் ஆகும்,” என்று கங்குலி கூறியிருந்தார்.
ஹார்டிக் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்ததும், இந்தியா மற்றும் நியூசிலாந்து முறையே வெலிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.