INDvAFG: அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னிலை வகித்த அஸ்வின்!

அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்களின் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளி அஷ்வின் நன்காம் இடம் பிடித்துள்ளார்!

Last Updated : Jun 15, 2018, 05:24 PM IST
INDvAFG: அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னிலை வகித்த அஸ்வின்! title=

அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்களின் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளி அஷ்வின் நன்காம் இடம் பிடித்துள்ளார்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் நிதான சதம் 105(153) மற்றும் ஷிகர் தவானின் அதிரடி சதம் 107(96) ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அரைசதங்களால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.

இதையடுத்து, அடுத்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. போட்டியின் போது, அஸ்வின் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளி நான்வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அஷ்வின் இந்த போட்டியில் ஆடுவதற்கு முன்னதாக 57 போட்டிகளில் ஆடி 311 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3 வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2 வது இடத்திலும், 619 விக்கெட்டுக்களுடன் கும்ப்ளே முதல் இடத்திலும் உள்ளனர். 

Trending News