இந்தியா என்ற வார்த்தைக்குப் பதிலாக இப்போது மத்திய அரசு பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. அரசியலமைப்பில் இந்தியா மற்றும் பாரத் என இரண்டு வார்த்தைகளும் இருந்தாலும், இதுவரை பிரை மினிஸ்டர் ஆப் இந்தியா, பிரசிடென்ட் ஆப் இந்தியா என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், திடீரென இதில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. இந்தியா என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம், எதிக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என தங்கள் கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளனர். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | ஒரு கோடி முறை 'கோவிந்தா' எழுதினா விஐபி தரிசனம் - திருப்பதியின் அதிரடி ஆஃப்பர்
இந்த வார்த்தையை வைத்தே எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியா கூட்டணி சார்பில் இதுவரை நடைபெற்ற அனைத்து கூட்டங்களும் தேசிய கவனத்தையும், குறிப்பாக சாமானிய மக்கள் வரை சென்றடைந்திருப்பதால், இதனை முறியடிக்க பாஜ கடுமையாக யோசித்து வந்தது. இந்தியா என்ற வார்த்தைக்கு மாற்றாக இருக்கும் பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறிய நிலையில், அதனை இந்திய அரசு இப்போது அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியான அறிவிப்பிலும், இப்போது பிரதமர் மோடி இந்தோனேஷியா மேற்கொள்ளும் சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பிலும் இந்தியா என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பாரத பிரதமர், பாரத குடியரசுத் தலைவர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி, பொய்களை அள்ளி வீசி பதவிக்கு வந்த பாஜகவால் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை. அவர்களால் செய்ய முடிந்த ஒரே ஒரு மாற்றம், இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு பாரத் என பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.
இதுவே பாஜகவுக்கு இந்தியா கூட்டணி மீது இருக்கும் பயத்தை காட்டுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் வைத்திருக்கும் பெயர் என்ற ஒரே காரணதிற்காக ஒருநாட்டின்பெயரையே மாற்றும் அளவுக்கு பாஜக வந்திருக்கிறது என்றால் அவர்களுக்கு இப்போதே தோல்வி பயம் தெரிய தொடங்கிவிட்டதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வரும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவுக்கு பதிலாக பாரதம் என்று நாட்டின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ