பாற்கடலை கடையும் மந்தர மலையையும் மோகினி அவதார விஷ்ணுவையும் பார்க்க வாய்ப்பு

Intangible Cultural Heritage of Humanity Kumbh Mela: 300 கோடி ரூபாய் செலவில் 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள கும்ப அருங்காட்சியகம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2022, 02:50 PM IST
  • உத்தரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு
  • டிஜிட்டல் அருங்காட்சியம் உருவாகிறது
  • பாற்கடல் கடைந்த நிகழ்வை டிஜிட்டல் வடிவில் பார்க்கலாம்
பாற்கடலை கடையும் மந்தர மலையையும் மோகினி அவதார விஷ்ணுவையும் பார்க்க வாய்ப்பு title=

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் கும்பம் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. 300 கோடி ரூபாய் செலவில் 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள இந்த அருங்காட்சியகம், மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதே குறிக்கோள் என்று மாநில அரசு கூறுகிறது. இந்த அருங்காட்சியகம் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகாகும்பத்திற்கு முன்னதாக கட்டப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.இந்த அருங்காட்சியகம் மந்தார மலை கொண்டு பாற்கடலை கடையும் நிகழ்வு முதல் பல புராண நம்பிக்கைகளை உணர்த்தும் காட்சிகள் கொண்ட டிஜிட்ட்ல அருங்காட்சியகம் இது.

உத்தரபிரதேசத்தின் மதம் மற்றும் கலாச்சார சுற்றுலாவை உலக அளவில் மேம்படுத்த வேண்டும் என்ற அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அருங்காட்சியகம் கட்டப்படுகிறது. சனாதன தர்மத்தின் புகழ்பெற்ற பாரம்பரியம் தொடர்பான அறிவைத் தரும் அருங்காட்சியமாக இது இருக்கும்.

மேலும் படிக்க | மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை மீன ராசிக்காரரே 

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இந்தியாவின் சிறந்த முனிவர்கள், யோகிகள், சித்தர்கள் என பலரைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். இந்த அருங்காட்சியகம் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகா கும்பமேளாவிற்கு முன்னதாக தயாராகிவிடும். பாற்கடல் கடைந்தது, சிவன் நஞ்சுண்டது, விஷ்ணுவின் மோகினி அவதாரம் என பல மத நம்பிக்கைகள் டிஜிட்டல் வடிவில் காட்டப்படும்.

மூன்று கட்டங்களாக அருங்காட்சியகம் கட்டப்படும்
அருங்காட்சியகம், மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு கட்டப்படும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். முதற்கட்டமாக பார்க்கிங், குளம், அருங்காட்சியகம், டிக்கெட், லாக்கர் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

இரண்டாவது கட்டத்தில், கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்குகள், பவர் ஹவுஸ் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றிய தகவல்களுக்காக டிஜிட்டல் கியோஸ்க்கள் உருவாக்கப்படும்.

மேலும் படிக்க | இறப்பை கணிக்கும் ஜாதகத்தின் எட்டாம் பாவகமும் கேதுவின் தாக்கமும்

மூன்றாவது கட்டத்தில், ஹோட்டல், ஷில்ப்கிராம், தற்காலிக கண்காட்சி இடம் ஆகியவை PPP முறையில் செய்யப்படும். ODOP உட்பட உள்ளூர் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு இங்கு இடம் ஒதுக்கப்படும். இதனுடன், ராஜஸ்தானின் சோக்கி தானியின் பாணியில் பல்வேறு உணவு வகைகளின் ஸ்டால்களும் இருக்கும்.

இந்த டிஜிட்டல் அருங்காட்சியக கட்டுமானம் குறித்து தகவல் தெரிவித்த பிரயாக்ராஜ் கோட்ட ஆணையர் சஞ்சய் கோயல், பிரயாக்ராஜ் கும்பத்திற்கு மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியம் (Intangible Cultural Heritage of Humanity) என்ற அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது. இந்த பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில், முதல்வர் பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். டிஜிட்டல் கும்ப் சங்க்ரஹாலயா இந்தத் தொடரின் ஒரு முயற்சி. 2025-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்துக்கு முன்பு அதற்கு வடிவம் கொடுக்கப்படும்”.

மேலும் படிக்க: இந்தியாவின் வெற்றியும், சீனாவின் தோல்வியும்...! பிரதமர் மோடியைப் பாராட்டிய ஜோ பைடன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News