9,940 ஆணுறைகளை வாங்கிய நபர்... 2023இல் இந்தியர்களின் வினோத ஆன்லைன் ஆர்டர்களை பாருங்களேன்!

Year Ender 2023: ஒரு Blinkit வாடிக்கையாளர் 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அதன் சுவாரஸ்யமான விற்பனை புள்ளிவிவரங்களை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 30, 2023, 05:31 PM IST
  • இந்த தகவல்களை அதன் சிஇஓ LinkedIn தளத்தில் பதிவிட்டுள்ளார்.
  • இந்தாண்டில் 3,20,04,725 மேகி பாக்கெட்டுகள் நள்ளிரவுக்கு பின் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு மாதத்தில் 38 உள்ளாடைகளை ஒருவர் ஆர்டர் செய்துள்ளார்.
9,940 ஆணுறைகளை வாங்கிய நபர்... 2023இல் இந்தியர்களின் வினோத ஆன்லைன் ஆர்டர்களை பாருங்களேன்! title=

Year Ender 2023: Zomato நிறுவனத்திற்கு சொந்தமான Blinkit டெலிவரி தளம் அதன் 2023ஆம் ஆண்டின் அதன் டிரெண்ட்களை (Blinkit Trends 2023) வெளியிட்டுள்ளது. Blinkit நிறுவனம் என்பது வாழைப்பழம் தொடங்கி சிறு சிறு பொருள்கள் முதல் பல பொருள்களை, பதிவுசெய்யப்பட்ட ஸ்டோர்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவாக டெலிவரி செய்யும் தளமாகும். 

சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் சேவையில் இருக்கும் இந்த தளத்தை Zomato நிறுவனம் வாங்கிய பின் தொடர்ந்து பல நகரங்களில் சேவையை விரிவுப்படுத்தி உள்ளது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டின் அதன் விற்பனைகள் குறித்த தகவல்களை Blinkit நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான அல்பிந்தர் திந்த்சா புகைப்பட விவரங்களுடன் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

வைரல் பதிவு:

அதிலும் குறிப்பாக, தெற்கு டெல்லியை சேர்ந்த Blinkit வாடிக்கையாளர் ஒருவர் இந்தாண்டில் மொத்தம் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்து தற்போது வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு சுமார் 30,02,080 PartySmart என்ற மாத்திரைகள் மொத்தம் 30,02,080 மாத்திரைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இது, இரவில் மது அருந்திய பிறகு காலையில் ஏற்படும் ஹேங்ஓவரைத் தவிர்க்க உதவும் மாத்திரை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 2023 ஜனவரி டூ ஜூன் வரை - இந்தியாவை அதிர வைத்த சம்பவங்கள்... ஓர் பார்வை

தொடர்ந்து இந்தாண்டில் மட்டும் 65 ஆயிரத்து 973 லைட்டர்களை குருகிராமில் ஒருவர் ஆர்டர் செய்திருக்கிறார். மேலும், பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஒரு பாக்கெட் லேஸ் மற்றும் ஆறு வாழைப்பழங்களுக்கு ஆர்டர் செய்துள்ளார்.

ஒரு நுகர்வோர் ஒரு ஆர்டரில் 101 லிட்டர் மினரல் வாட்டரை வாங்கியிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு சுமார் 3,20,04,725 (3 கோடியே 20 லட்சத்து 4 ஆயிரத்து 725 பாக்கெட்டுகள்) மேகி பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டன. இந்தாண்டு ஒருவர் 4,832 குளியல் சோப்புகளை வாங்கியிருக்கிறார்.

காலை 8 மணிக்கு முன் சுமார் 351,033 பிரிண்ட்அவுட்கள் டெலிவரி செய்யப்பட்டன. மேலும், இந்தாண்டு 1,22,38,740 ஐஸ்கிரீம்கள்; 8,50,011 ஐஸ் கியூப் பாக்கெட்டுகளுடன் 45 லட்சத்து 16 ஆயிரத்து 490 ஈனோ சாச்செட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டன.

ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் இந்தாண்டு மட்டும் 17,009 கிலோ அரிசியை ஆர்டர் செய்துள்ளார். ஒரு மாதத்தில் 38  உள்ளாடைகள் அடையாளம் தெரியாத ஒருவரால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு வாடிக்கையாளர் 972 மொபைல் சார்ஜர்களை ஆர்டர் செய்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு குளிர்பானங்களை விட டானிக் வாட்டருக்குதான் (Carbonated Drinks) அதிக ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | 2023இல் டெக் உலகை கலக்கிய சிறந்த 5 AI தொழில்நுட்பங்கள்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News