காஷ்மீர்: பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டால் 5 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்

Updated: Sep 26, 2016, 04:32 PM IST
காஷ்மீர்: பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டால் 5 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்
Zee Media Bureau

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியதில் 5 சி.ஆர்.பி.எப் வீரர்கள் காயம் அடைந்தனர். 

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் வான்போக் பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியுள்ளனர். கையெறி குண்டு வெடித்ததில் 5 பாதுகாப்பு படை போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.