கார்நாடகா லோக்ஆயுக்தா நீதிபதிக்கு மர்ம நபரால் கத்திகுத்து!

கர்நாடகா லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்!

Updated: Mar 7, 2018, 03:01 PM IST
கார்நாடகா லோக்ஆயுக்தா நீதிபதிக்கு மர்ம நபரால் கத்திகுத்து!

பெங்களூரு: கர்நாடகா லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்!

பெங்களூரில் தனது அலுவலகத்தில் இருந்த அவரை சந்திக்க வந்த மர்ம நபர் ஒருவர், 3 முறை கத்தியால் குத்தியுள்ளார். சம்பவத்திற்கு பின்னர் மர்ம நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவ கண்கானிப்பில் சேர்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, விஸ்வநாத் ஷெட்டி அபாய கட்டத்தினை தாண்டிவிட்டார் எனவும், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் உறுதிபடுத்தியுள்ளார்!

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தேஜஸ் சர்மா எனவும், இவர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பகா ஷெட்டி அவர்களின் அலுவலக CCTV கேமிரா பதிவினை காவல்துறையினர் ஆரயா முடிவுசெய்துள்ளனர்.

முதற்கட்ட தகவல் படி அவரது மார்பு மற்றும் வயிற்று பகுதியில் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது.

(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)