சீண்டிய சிறுத்தையை ஆட்டுக்குட்டியைப் போல் அலேக்காக தூக்கிவந்த இளைஞர் - வைரல் வீடியோ

Cheetah Viral Video: ஆட்டை வண்டியில் கட்டுவதை போன்று, தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கயிறால் கட்டி, அதனை வண்டியில் வைத்து கொண்டுவந்த ஒரு இளைஞரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 15, 2023, 02:55 PM IST
  • இச்சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
  • நேற்று காலை அந்த இளைஞர் பண்ணைக்கு செல்லும் வழியில் சிறுத்தை தாக்கியுள்ளது.
  • தற்போது சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீண்டிய சிறுத்தையை ஆட்டுக்குட்டியைப் போல் அலேக்காக தூக்கிவந்த இளைஞர் - வைரல் வீடியோ title=

Cheetah Viral Video: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரே தாலுக்கா பாகிவாலு கிராமத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. சிறுத்தையை பார்த்தால் எல்லாரும் பயந்து ஓடுவது தான் இயல்பு, அதை பார்த்தால் யாருக்குத்தான் பயம் இருக்காது சொல்லுங்கள். அதன் பெயரைக் கேட்டாலே பயந்து ஓடிபவர்களும் இங்கு உள்ளனர்.

வனத்துறை அதிகாரிகளாலும் சிறுத்தையை அவ்வளவு எளிதில் பிடித்துவிட முடியாது, அந்த அளவு அதை பிடிப்பது கடினமாகும். ஆனால், சிறுத்தையை அசால்ட்டாக கால்களை கட்டி தூக்கிவந்த ஒரு சம்பவம் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் அரசிகெரே தாலுகாவில் உள்ள பாகிவாலு கிராமத்தில் நடந்துள்ளது. அதாவது, அந்த பயமறியா இளைஞர் உயிருடன் சிறுத்தையை பிடித்து பைக்கில் கட்டிவைத்து, அதை ஓட்டிச் சென்றிருக்கிறார்.

மேலும் படிக்க | ஜஸ்ட்ல மிஸ் டா சாமி.. செருப்புக்குள் படுத்திருந்த பாம்பு: வீடியோ வைரல்

முத்து என்கிற வேணுகோபால் தான் அந்த சிறுத்தையை பிடித்த இளைஞர். அவர் நேற்று (ஜூலை 14) காலையில் தனது பண்ணைக்கு இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ​​அவரை சிறுத்தை தாக்கியுள்ளது. அப்போது சிறுத்தை பிடித்த அவர், அதனை கால்களை கயிறால் கட்டி, அதனை பைக்கில் கட்டிவைத்து வனத்துறையினரிடம் கொண்டுசென்று ஒப்படைத்தார் என கூறப்படுகிறது. தற்போது சிறுத்தை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

முதலில் தன்னை தாக்கிய சிறுத்தையை அவர் விரட்ட முற்பட்டுள்ளார். அது மீண்டும் தாக்க வந்துள்ளது அப்போது தடியின் உதவியுடன் சிறுத்தையை பிடித்த அவர், தனது பைக்கில் அதை கட்டிவைத்து பைக்கில் தனது கிராமத்திற்கு முதலில் எடுத்து சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் அளித்த அவர்கள், சிறுத்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வனத்துறையினர் கொண்டு வந்தனர். கந்தசியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிறுத்தைப்புலிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

கர்நாடக மாவட்டம் அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்திய சிறுத்தைகளை மீட்க வனத்துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்றாலும், வனச்சட்டத்தின்படி, வேணுகோபால் தற்காப்புக்காக விலங்கைப் பிடித்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | அடப் பாவிகளா.. தக்காளிக்கு செக்யூரிட்டி விஷப்பாம்பா: பகீர் கிளப்பும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News