Latest News Punjab Birthday Cake Death Reason : மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் பிறந்தநாள் விழாக்கள, பல சமயங்களில் எதிர்பாராத விதமாக சாேகத்தில் முடியும் சம்பவங்கள் பல தற்போது தாெடர்ந்து நிகழ்ந்து வருகிறது. தற்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தனது பிறந்தநாளன்று கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டார். இந்த இறப்பிற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்ததை தொடர்ந்து, தற்போது அந்த இறப்பிற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு..
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுமி, கடந்த மார்ச்ச மாதம் 24ஆம் தேதியன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். இந்த பிறந்தநாள் விழா, இவர்களின் வீட்டிலேயே குடும்பத்தினர் சூழ எளிமையாக நடந்துள்ளது. இந்த பிறந்தநாள் கேக்கை, சிறுமியின் குடும்பத்தார், பட்டியாலாவில் ஒரு பேக்கரியில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் மூலமாக வரவழைத்துள்ளனர். இந்த கேக், மாலை 6 மணி அளவில் டெலிவரி செய்யப்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் சுமார் 7 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த கேக்கை, பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி உள்பட அவரது குடும்பத்தார் அனைவருமே சாப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, மறுநாள் காலையில் குடும்பத்தினர் அனைவருமே உடல் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி மயக்க நிலைக்கு சென்றதை அடுத்து மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
பேக்கரி உரிமையாளர் கைது!
சிறுமியின் உயிரிழப்பிற்கு, அவர் சாப்பிட்ட கேக்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். அந்த கேக்கில் கலந்திருந்த விஷப் பொருள்தான் சிறுமியின் உயிரை பறித்திருப்பதாக கூறி, போலீஸாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில், பேக்கரி உரிமையாளர் மீது பாேலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்காெண்டு வந்தனர். இதற்கிடையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்டது.
மேலும் படிக்க | வானிலை அறிக்கை... இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்...!
காரணம் கண்டுபிடிப்பு..
சிறுமி சாப்பிட்டது, சாக்லேட் கேக் ஆகும். இந்த கேக்கில், Artificial Sweeteners எனப்படும் செயற்கை இனிப்பு பொருள் ஒன்று கலக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் saccharine. இதை, இனிப்பு சுவைக்காக பலர் தங்களது உணவு பொருட்களை தயாரிக்கும் போது பயன்படுத்துவர். இந்த பொருள், சிறுமி சாப்பிட்ட கேக்கில் அதிகளவு கலக்கப்பட்டதுதான் காரணம் என தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது. இதை குறிப்பிட்ட அளவு சில செயற்கை பானங்களிலும் இனிப்பு பொருட்களிலும் பயன்படுத்துவதால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் அளவுக்கு மீறி இதனை உபயோகித்தால் உடலில் உள்ள க்ளூகோஸ் அளவு அதிகரித்து உயிரையே மாய்க்க கூடும் என்று பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இது போன்ற கேக்கை தயாரித்த கடையை, Zomato நிறுவனம் தங்களின் உணவு டீலர்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறது. ஏற்கனவே அந்த கடையின் உரிமையாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சிறுமியின் 30 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ