பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி, திரு.எல்.கே. அத்வானியின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்ய உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், வீடியோ கான்பரன்சிங் மூலம், பாஜக மூத்த தலைவர் திரு. LK Advani அவர்களின் வாக்குமூலத்தை, ஜூலை 24ஆம் தேதி, லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்ய உள்ளது.
இவரது வாக்குமூலம், CrPC-யின் 313வது பிரிவின் கீழ் வீடியோ கான்ஃபரெஸிங் மூலம் பதிவு செய்யப்படும்.
மேலும், ஜூலை மாதம் 23ஆம் தேதி பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்களின் வாக்கு மூலத்தையும் பதிவு செய்யும்.
ஜூலை 22ம் தேதி சிவசேனை கட்சியின் முன்னாள் எம்பி சதீஷ் பிரதான் வீடியோ இணைப்பு மூலம் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடெங்கிலும் கொரோனா தொற்று நோய் பரவி வருவதை அடுத்து, தேசிய அளவில் லாக்டவுன் அமல் செய்யப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான விசாரணையை, சிறிது ஒத்தி வைத்து, ஜூன் 4 முதல், சிறப்பு சிபிஐ நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.
CBI தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில், 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் 32 பேர் மட்டுமே இப்போது உள்ளனர். மீதமுள்ளவர்கள் இறந்துவிட்டனர்.
ALSO READ | எல்லை பதற்றத்திற்கு இடையில் இந்திய-அமெரிக்க கடற்படைகள் அந்தமானில் பயிற்சி…!!!
முன்னதாக, இந்த வருடம் மே மாதம், பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்த நீதிபதி எஸ்.கே.யாதவ்-ன் பதவி காலத்தை, ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உச்சநீதிமன்றம் இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடித்து தீர்ப்பை வழங்குமாறும் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
ALSO READ | அமெரிக்காவிற்கு உளவு பார்த்த உளவாளியை தூக்கிலிட்டது ஈரான்..!!!