லாக் டவுன் 2.0: காரில் ஒருவர் மட்டும் பயணிக்க வேண்டும்; டூ-வீலரில் பின்னால் யாரும் அமரக்கூடாது

வேலைக்கு அழைக்கும் நிறுவனங்கள் கட்டாய வெப்பநிலை பரோசோதனை கருவியை வைத்திருக்க வேண்டும். பணியிட வளாகங்களை வழக்கமாக சுத்திகரித்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் வேண்டும். நிறுவனத்தில் வசதியான இடங்களில் கிருமி நாசினிகளை (Santisers) வைத்திருக்க வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 15, 2020, 08:25 PM IST
லாக் டவுன் 2.0: காரில் ஒருவர் மட்டும் பயணிக்க வேண்டும்; டூ-வீலரில் பின்னால் யாரும் அமரக்கூடாது title=

இந்திய ஒன்றியம்: மே 3 வரை நாட்டில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நீட்டிப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கம் புதன்கிழமை புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கட்டளைகளின்படி, ஊரடங்கு உத்தரவு காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள், வாகனத்தில் செல்லும் போது, ஒரு நபர் மட்டுமே செல்ல வேண்டும். ஒருவேளை நான்கு சக்க வண்டியில் (கார்) பயணம் செய்யும் போது ஓட்டுநர் இருந்தால், பின் இருக்கையில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதுதவிர டூ-வீலர் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அவர்களுடன் யாரையும் பின்னால் உட்கார வைத்து கூட்டி செல்லக்கூடாது என்று எம்.எச்.ஏ (MHA) தனது வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

மருத்துவ மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட அவசர சேவைகளுக்கான தனியார் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான ஊரடங்கின் போது இயக்க அனுமதிக்கப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நான்கு சக்கர வாகனங்கள் வந்தால், தனியார் வாகன ஓட்டுநரைத் தவிர ஒரு பயணிகளை பின்சீட்டில் அனுமதிக்க முடியும். இருப்பினும், இரு சக்கர வாகனங்கள் இருந்தால், வாகனத்தின் ஓட்டுநருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும், என்று MHA புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மாநில / யூனியன் பிரதேசம் (UT) உள்ளூர் அதிகாரசபையின் அறிவுறுத்தல்களின்படி, விலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகளில் வேலைக்குச் செல்லும் மற்றும் திரும்பும் அனைத்து பணியாளர்களும்," MHA வெளியிட்டுள்ள அறிக்கையை பின்பற்ற வழியுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது பணியிட விதிகள் குறித்த உத்தரவையும் எம்.எச்.ஏ வெளியிட்டது.

வேலைக்கு அழைக்கும் நிறுவனங்கள் கட்டாய வெப்பநிலை பரோசோதனை கருவியை வைத்திருக்க வேண்டும். பணியிட வளாகங்களை வழக்கமாக சுத்திகரித்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் வேண்டும். நிறுவனத்தில் வசதியான இடங்களில் கிருமி நாசினிகளை (Santisers) வைத்திருக்க வேண்டும். வேலைக்கு வரும் ஊழியர்களி ஒரு ஷிப்டுகளில் வைக்கப்பட வேண்டும். அதாவது ஷிப்டுக்கு தகுந்தாறு போல ஒரு மணி நேரம் இடைவெளியில் மதிய உணவுக்கு நேரம் ஒதுக்க வேண்டும், அதன் மூலம் சமூக தூரத்தை உறுதி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

பணி குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றால் பெரிய கூட்டமாக சேராமல், அதிகபட்சமாக 10 பேர் மட்டும் விவாதிக்க வேண்டும். மக்கள் ஒருவருக்கொருவர் குறைந்தது 6 அடி தூரத்தில் அமர வேண்டும். லிஃப்ட்டுகளில் 2-4 பேருக்கு மேல் அனுமதிக்கப்படக்கூடாது.

இவை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட செயல்படும் பணியிடங்களுக்கான வழிகாட்டுதல் ஆகும்.

Trending News