புது டெல்லி: அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட கோவிட் -19 கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் (Unlock 6.0 Guidelines) மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை தொடரும் என உள்துறை அமைச்சகம் (MHA) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. அதாவது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (Lockdown) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் சாராம்சம் கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்க வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அதேபோல கொரோனா நோய் கட்டுப்பாட்டு (Containment Zones) பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு விதிகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
கோவிட் -19 நோயின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிப்பதன் மூலம் எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டிய மிகவும் அவசியம் என எம்.எச்.ஏ கூறியதுடன், பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கிய "ஜான் அந்தோலன்" மூன்று "மந்திரங்களை'" பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளது. உங்கள் முகமூடியை சரியாக அணியுங்கள், அடிக்கடி கைகளை கழுவுங்கள் மற்றும் ஆறு அடி தூரத்தை பராமரிக்கவும் என்பதே பிரதமரின் அந்த மூன்று மந்திரங்கள் ஆகும்.
நாட்டில் உள்ள மாநிலங்களுக்கிடையே தனிநபர்கள் மற்றும் போக்குவரத்துக்கான எந்தவித சிறப்பு அனுமதி மற்றும் முன் அனுமதி பெற வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ALSO READ | கொரோனா தாண்டவம் 2வது முறை தொடங்கியதால், மீண்டும் லாக்டவுனை அறிவிக்கும் நாடுகள் எவை..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR