பாஜகவை கடுமையாக சாடிய அக்கட்சியின் எம்.பி. சத்ருகான் சின்ஹா

பா.ஜ.கவின் மூத்த தலைவரும், அமைச்சருமான சத்ருகன் சின்ஹா பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 26, 2019, 07:58 PM IST
பாஜகவை கடுமையாக சாடிய அக்கட்சியின் எம்.பி. சத்ருகான் சின்ஹா  title=

நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசு மீது தொடர்ந்து கூர்மையான விமர்சனங்கள் வைத்து வரும் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஷத்ருகான் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் வரும் வியாழக்கிழமை இணைய உள்ளார் என ஆதாரங்கள் கூறுகின்றன. இந்தமுறை அவருக்கு மக்களவை சீட் ஒதுக்கப்படவில்லை. அவருடைய தொகுதி மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டது.

தனக்கு சீட் ஒதுக்காததால் பெரும் அதிருப்தியில் உள்ள சத்ருகன் சின்ஹா தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்தவகையில் 20 சதவீதம் ஏழை மக்களுக்கு மாத வருமானம் ரூ.12 ஆயிரம் கிடைக்க வகை செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். அந்த திட்டத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து பாராட்டிய சத்ருகன் சின்ஹா. மறுபுறத்தில் பாஜகவை சாடியுள்ளார்.

அவர் கூறியதாவது: 

ராகுல்காந்தி அறிவித்த திட்டத்தை, இவ்வளவு சீக்கிரம் பாஜக எதிர்க்க என்ன காரணம்? இன்னும் திட்டம் செயல்படுத்தவே இல்லை, ஆனால் அந்த திட்டத்தின் மீது கேள்விகள் ஏன் பாஜக எழுப்புகிறது. பாஜக திட்டம் கொண்டு வந்தால் அது நல்ல திட்டம், சாத்தியமாகும். ஆனால் மற்றவர்கள் திட்டம் கொண்டு வந்தால் அது தேவையற்றது, சாத்தியமில்லை என்று கூறுவதா பாஜக? என கடுமையாக கேள்விகளை சின்ஹா எழுப்பினார்.

பாஜகவிடம் நான் கேட்கிறேன். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும், விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், இளைஞர்களுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என அறிவித்தது. அது சரிதானா? அதை நிரைவேற்றினார்களா? என்றும் கடுமையாக சாடினார். 

மேலும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மூன்று மாநிலங்களில் ​​காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகள் கடன்கள் மன்னிக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் கட்சியை பாராட்டினார்.

சத்ருகன் சின்ஹா கருத்தை வைத்து பார்க்கும் போது காங்கிரஸ் கட்சியில் அடுத்து இரண்டு நாளில் இணைவார் என்றே தெரிகிறது. மேலும் நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அவ்வாறே கூறுகின்றன.

Trending News