மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இனிமே சென்னை உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்படும்

Last Updated : Jul 5, 2016, 05:58 PM IST
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இனிமே சென்னை உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்படும் title=

பிரதமர் நரேந்திர மோடி தலைமயில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள பல்வேறு பெயர்களை மாற்றுவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

அதன்படி, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் என்றும், பாம்பே உயர்நீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றம் என்றும், கல்கத்தா உயர்நீதிமன்றம் கொல்கத்தா உயர்நீதிமன்றம்  என்றும் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். 

அதேபோல், குளச்சல் அருகே பெரிய துறைமுகம் அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறுகிய கால கடனாக ரூ.3 லட்சம் வரை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 

Trending News