நடுவானில் நடந்த திருமணம்; SpiceJet விமான பணிக்குழு இடை நீக்கம்

இந்த மதுரை ஜோடியின் திருமணம் வான் பகுதியில், மீனாட்சி அன்னை-சொக்கநாதர் கோயிலின் மேல்பரப்பில் நடைபெற்றது . வானில் பறந்துக் கொண்டே திருமணத்தை நடத்தி முடித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 24, 2021, 06:22 PM IST
  • திருமணத்தில் அதிகபட்சம் 50 உறவினர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • 160 உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி கொரோனா தடுப்பு விதிகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு.
  • விமானம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மேலே வானில் பறந்து சென்றபோது, மாப்பிள்ளை, மணமகளுக்கு தாலி கட்டினார்
நடுவானில் நடந்த திருமணம்; SpiceJet விமான பணிக்குழு இடை நீக்கம் title=

கொரோனா காலத்தில், திருமணம் செய்ய ஏகப்பட்ட கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமண தடைகளை நீக்க மதுரையை சேர்ந்த தம்பதியினர் புது வழிகளை கண்டுபிடித்தன. 

இந்த ஜோடி மதுரையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் விமானம் ஒன்றை முன்பதிவு செய்தனர். அந்த விமானத்தில் 161 உறவினர்களுக்கு டிக்கெட் பதிவு செய்து ஒன்றாக பயணம் செய்தனர். விமானம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மேலே வானில் பறந்து சென்றபோது,  மாப்பிள்ளை, மணமகளுக்கு தாலி கட்டினார்.

இந்த வித்தியாசமான திருமணத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, ஒரு பயனர் அதை ட்விட்டரில் பகிர்ந்தார். “மதுரைச் சேர்ந்த ராகேஷ்-தட்சினா, இரண்டு மணி நேரம் விமானத்தை வாடகைக்கு எடுத்து திருமணத்தை வானத்தில் செய்து கொண்டார்கள். பெங்களூரிலிருந்து மதுரைக்கு செல்லும் ஸ்பைஸ்ஜெட் (Spice Jet) விமானத்தில் திருமணம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது” என்று அந்த டிவிட்டர் பதிவில் பதிவிடப்பட்டது.

இந்த மதுரை ஜோடியின் திருமணம் வான் பகுதியில், மீனாட்சி அன்னை-சொக்கநாதர் கோயிலின் மேல்பரப்பில் நடைபெற்றது . வானில் பறந்துக் கொண்டே திருமணத்தை நடத்தி முடித்தனர்.

விழாவின் போது உறவினர்கள் மலர்களை தூவி வாழ்த்திய வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகியது. ஆனால், அந்த விமான பணிகுழுவினருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திருமணத்தில் அதிகபட்சம் 50 உறவினர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், 160  உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி கொரோனா தடுப்பு விதிகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.  

ALSO READ | Viral Photo: NASA வெளியிட்ட ஒரியன் நெபுலா புகைப்படம் வைரலானது

 

இது தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (DGCA) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த DGCA மூத்த அதிகாரி, கொரோனா தொடர்பான வழிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, அனைத்து விதிமுறைகளும் மீறியதற்காகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததற்காகவும், விமானக் குழுவினர்  மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Also Read | இன்று முதல் மாத இறுதி வரை தமிழகத்தில் அனுமதி எதற்கு? தடையில்லா சேவை எவை?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News