Night Shift முடிந்து வீடு திரும்பிய ஆணுக்கு நிகழ்ந்த விபரீதம்!

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பிறகும், கும்பல் கொலை சம்பவங்கள் குறைந்தபாடு இல்லை!

Last Updated : Aug 25, 2019, 07:31 PM IST
  • இரவு நேர பணியை முடித்து வீடு திரும்புகையில்., அவரை ஊர் மக்கள் திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
  • கடும் தாக்குதலுக்கு ஆளான ரன்வீர் வீடு சென்று உறங்கியுள்ளார். உறங்கியவர் மறு நாள் காலை எழவில்லை.
Night Shift முடிந்து வீடு திரும்பிய ஆணுக்கு நிகழ்ந்த விபரீதம்! title=

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பிறகும், கும்பல் கொலை சம்பவங்கள் குறைந்தபாடு இல்லை!

நாளுக்கு நாள் கும்பல் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் தற்போது கும்பல் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் திருட்டு சந்தேகத்தின் பேரில் கும்பல் தாக்குதலால் கொடூரமாக கொலை செயப்பட்டுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் ஆனது உத்திரபிரதேச மாநிலம் முவானா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைப்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை தெரிவிக்கையில்., மீரட் பகுதியின் திகோலி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரன்வீர்.  அப்பகுதியில் உள்ள மவானா சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகின்றார். சம்பவ நாள் அன்று இரவு நேர பணியை முடித்து வீடு திரும்புகையில்., அவரை ஊர் மக்கள் திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர் தங்கள் ஊர் பகுதியை சேர்ந்தவர் தான் என உணர்ந்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடும் தாக்குதலுக்கு ஆளான ரன்வீர் வீடு சென்று உறங்கியுள்ளார். உறங்கியவர் மறு நாள் காலை எழவில்லை. மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ரன்வீரின் குடம்பத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களிடன் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Trending News