₹1500-ஐ ₹1000 கோடி சாம்ராஜ்ஜியமாக மாற்றிய MDH மசாலா நிறுவனர் காலமானார்..!!

  மசாலா பிராண்டான MDH நிறுவனர், மகாஷய் தரம்பால் குலாட்டி (Mahashay Dharampal Gulati)  ‘மசாலா கிங்’ என்று அழைக்கப்பட்டார். 97 வயதான குலாட்டி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள மாதா சனன் தேவி மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக இறந்தார். அவர் கடந்த மூன்று வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2020, 02:23 PM IST
  • 1923 இல் பாகிஸ்தானின் சியால்கோட்டில் பிறந்த ‘மகாஷய்’ பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் போது அவரது பாக்கெட்டில் இருந்த பணம் ₹1500.
  • அவர் தில்லி வந்ததும் 650 ரூபாய்க்கு ஒரு டாங்கா என்னும் குதிஅரை வண்டியை வாங்கினார்.
  • ‘தாதாஜி’ என்று அன்பாக அழைக்கப்பட்ட அவர், எம்.டி.எச் பிராண்ட் முகமாக ஆனார்.
₹1500-ஐ ₹1000 கோடி சாம்ராஜ்ஜியமாக மாற்றிய MDH மசாலா நிறுவனர் காலமானார்..!!  title=

புதுடெல்லி:  மசாலா பிராண்டான MDH நிறுவனர், மகாஷய் தரம்பால் குலாட்டி (Mahashay Dharampal Gulati)  ‘மசாலா கிங்’ என்று அழைக்கப்பட்டார். 97 வயதான குலாட்டி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள மாதா சனன் தேவி மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக இறந்தார். அவர் கடந்த மூன்று வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

1923 இல் பாகிஸ்தானின் (Pakistan)  சியால்கோட்டில் பிறந்த ‘மகாஷய்’ பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் போது அவரது பாக்கெட்டில் இருந்த பணம் ₹1500. அவர் தில்லி வந்ததும் 650 ரூபாய்க்கு ஒரு டாங்கா என்னும் குதிஅரை வண்டியை வாங்கினார். அவர் புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து குதுப் சாலை வரை அதை ஓட்டி, அதில் சம்பாதித்து வந்தார்.

தில்லியில் (Delhi) அவர் தொடர்ந்து தனது தந்தையின் உதவியுடன் பல தொழில்களை முயற்சித்தார், பின்னர் சோப்பு, தச்சு, துணி, அரிசி  விற்பனை போன்றவற்றைத் தொடங்கினார், ஆனால் எதுவும் வெற்றி பெறவில்லை. விரைவில், அவர் தனது தந்தையின் கடையில் வேலை செய்ய தொடங்கினார், இது பிரபலமாக மிளகாய் கடை என மக்கள் அழைத்து வந்தனர்

இறுதியில், இந்த கடையில் சம்பாதித்த வருமானத்தை கொண்டு, டெல்லியின் கரோல் பாக் என்ற இடத்தில் அவரது குடும்பத்தினர் சொத்து வாங்க போதுமான பணம் சம்பாதித்தனர். அங்கு அவர் ஒரு மசாலா (Masala) கடையைத் திறந்தார். அவரது வணிகம் வளரத் தொடங்கியதும் அதை தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தத் தொடங்கி ரூ .1,000 கோடி வணிக பேரரசாக மாற்றினார்.

‘தாதாஜி’ என்று அன்பாக அழைக்கப்பட்ட அவர், எம்.டி.எச் பிராண்ட் முகமாக ஆனார்.  சுமார் 62 வகையான மசாலாக்களை தயாரித்து விற்று உலகளவில் அதனை அனுப்பினார். அவர் உலகின் பழமையான விளம்பர நட்சத்திரமாக கருதப்படுகிறார்.

ALSO READ | பிரதமர் மோடிக்கு தனது அனைத்து நிலங்களையும் கொடுக்க விரும்பும் 85 வயது பெண்மணி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News