வானிலிருந்து விழுந்த 2.78 கிலோ எடையுள்ள விண்கல்.... பீதியில் மக்கள்...!

2.78 கிலோ எடையுள்ள ஒரு பொருள் வானத்திலிருந்து விழுந்ததால், பூமியில் ஒரு அடி ஆழமான பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..!

Last Updated : Jun 20, 2020, 02:44 PM IST
வானிலிருந்து விழுந்த 2.78 கிலோ எடையுள்ள விண்கல்.... பீதியில் மக்கள்...! title=

2.78 கிலோ எடையுள்ள ஒரு பொருள் வானத்திலிருந்து விழுந்ததால், பூமியில் ஒரு அடி ஆழமான பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..!

ராஜஸ்தானின் சஞ்சூர் நகரத்தில் திடீர் என வானத்திலிருந்து விழுந்த விண்கல் போன்ற ஒரு பொருள் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை சுமார் 2.78 கிலோ எடையுள்ள ஒரு பொருள் வானத்திலிருந்து விழுந்ததால், பூமியில் ஒரு அடி ஆழமான பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் வீழ்ச்சியால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய வெடிப்பு வகை ஒலி இரண்டு கிலோமீட்டர் நீளத்தில் எதிரொலித்தது. வெடிக்கும் சத்தத்தை கேட்ட உள்ளூர்வாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் பூபேந்திர யாதவ் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், அந்த நேரத்தில் மிகவும் சூடாக இருந்த விண்கல் துண்டைக் கண்டு திகைத்துப் போனார். பொருள் வெப்பத்தை வெளியிடுவதால், அதை குளிர்விக்க அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு குடுவையில் அடைக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில்... "வானத்தில் இருந்து ஒரு பெரிய சத்தத்துடன் பொருள் விழுந்த இடத்தை நாங்கள் பரிசோதித்தோம். இது ஒரு விண்கல் துண்டை போன்று காணப்படுகிறது. இது பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இது மேலும் பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்" என கூறினார். 

READ | நீங்களும் ₹.1 லட்சம் வெல்ல ஒரு அருமையான வாய்ப்பு... நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

சஞ்சூரில் உள்ள நகைக் கடையில் அமைந்துள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை பரிசோதித்தனர். இந்த துண்டு ஜெர்மானியம், பிளாட்டினியம், நிக்கல் மற்றும் இரும்பு (10.23 சதவீத நிக்கல், 85.86 சதவீதம் இரும்பு, பிளாட்டினம் 0.5) சதவீதம், கோபிட் 0.78 சதவீதம், ஜெரனியம் 0.02 சதவீதம், ஆண்டிமனி 0.01 சதவீதம் நியோபியம் 0.01 மற்றும் பிற 3.02 சதவீதம்). 

இந்தியாவின் புவியியல் ஆய்வு மற்றும் அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் அலுவலகத்தில் உள்ள புவியியலாளர்கள் குழுக்கள் மேலதிக பரிசோதனைக்கு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளன. இந்த பொருள் தற்போது சஞ்சூர் காவல் நிலையத்தில் உள்ளது, அது விழுந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்று யாதவ் கூறினார்.

Trending News