நக்சலைட்டுகளின் வெறியாட்டம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தூக்கிலிட்டு படுகொலை

கயாவில், சனிக்கிழமை இரவு ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை நக்சலைட்டுகள் தூக்கிலிட்டு, கொன்றனர். அவர்களின் வீட்டையும் குண்டு வைத்து தகர்த்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2021, 02:31 PM IST
நக்சலைட்டுகளின் வெறியாட்டம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தூக்கிலிட்டு படுகொலை title=

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் துமாரியா தொகுதியின் மவுன் பார் கிராமத்தில் நக்சலைட்டுகள் 4 பேரைக் கொன்றதுடன் இரண்டு வீடுகளையும் குண்டு தகர்த்தனர். சனிக்கிழமை இரவு கயா மாடோவில் நக்சலைட்டுகள் இச்சம்பவத்தை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை உறுதி செய்த எஸ்எஸ்பி ஆதித்ய குமார், போலீஸிற்கு தகவல் அளிக்கும் இன்பார்மர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நக்சலைட்டுகள் 4 பேரை கொன்றுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பிகாரில்  (Bihar) நக்சலைட்டுகள் நான்கு பேரை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் இன்பார்மர் என்ற சந்தேகத்தின் பேரில், சனிக்கிழமை இரவு நக்சலைட்டுகள் கிராமத்தில் வசிக்கும் சர்ஜு சிங் போக்தாவின் வீட்டிற்குள் நுழைந்து, கணவன், மனைவி உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொடூரமாக தூக்கிலிட்டனர். கொல்லப்பட்டவர்களில் சதேந்திர சிங், மகேந்திர சிங், மனோரமா தேவி மற்றும் சுனிதா சிங் ஆகியோர் அடங்குவர். தோடு நிற்காமல் அந்த வீட்டையும் நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.

ALSO READ  | மின்சார கட்டணம் அதிரடியாக அதிகரிக்கும்! விதிகளை அமல்படுத்தியது மத்திய அரசு

இந்தக் கொலை, வெடிகுண்டு சம்பவத்தை நடத்திவிட்டு, நக்சலைட்டுகள்,  ஒரு நோட்டீஸையும் ஒட்டி  “இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த காலத்தில், நான்கு நக்சலைட்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்றிருக்கிறார்கள், அவர்கள் என்கவுண்டரில் இறக்கவில்லை” என்று எழுதினர். அம்ரேஷ் குமார், சீதா குமார், ஷிவ்புஜன் குமார் மற்றும் உதய் குமார் ஆகியோரின் உயிர் தியாகத்திற்காக பழிவாங்கப்பட்டது என்று துண்டுப் பிரசுரத்தில் நக்சலைட்டுகள் எழுதியுள்ளனர்.

ALSO READ | ஏழாண்டுகளாக ஏமாற்றி வந்த மோசடி மன்னன் கைது

இந்த சம்பவம் குறித்து எஸ்எஸ்பி ஆதித்ய குமார் கூறுகையில், 'தேர்தலில் தங்கள் ஆதிக்கத்தை காட்ட நக்சலைட்டுகள் இந்த கோழைத்தனமான செயலை செய்துள்ளனர். 4 நக்சலைட்டுகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட அதே இடத்தில்தான் இந்தக் கொலையும் நடந்துள்ளது என்றார். அப்பகுதி முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

ALSO READ | கோவை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News