நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 8 தமிழக மாணவர்கள் முதலிடம்

NEET UG Result 2024 Declared: இம்முறை தமிழ் நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1.52 லட்சம் மாணவர்களில் 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 5, 2024, 11:25 AM IST
  • தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையில் 16.85% அதிகரிப்பு.
  • பிரிவு வாரியாக தேர்ச்சி நிலைமை எப்படி உள்ளது?
  • கவுன்சிலிங் எப்போது தொடங்கும்?
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 8 தமிழக மாணவர்கள் முதலிடம் title=

NEET UG Result 2024 Declared: தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 13.16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 67 மாணவர்கள் முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்களும் அடங்குவர். இந்த மாணவர்களுக்கு 99.997129 சதவீத மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டு 2024 நீட் தேர்வில் பொதுப் பிரிவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வேத் சுனில்குமார் ஷெண்டே முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சையத் ஆரிபின் யூசுப் எம் உள்ளார். இவரும் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர். மூன்றாவது இடத்தில் தேசிய தலைநகர் டெல்லியைச் சேர்ந்த மிருதுல் மன்யா ஆனந்த் உள்ளார். 

இம்முறை தமிழ் நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1.52 லட்சம் மாணவர்களில் 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

NEET UG தேர்வு முடிவுகளை X இல் NTA அறிவித்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 24 லட்சம் மாணவர்கள் NEET UG அதாவது மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள், exams.nta.ac.in/NEET என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று நீட் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். NEET UG முடிவை பார்க்க, மாணவர்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். NEET UG தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். NEET முடிவு 2024 உடன், NTA NEET UG கட்-ஆஃப்-ஐயும் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, அனைத்து பிரிவினருக்கும் நீட் 2024 கட்ஆஃப் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEET 2024 Results: தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையில் 16.85% அதிகரிப்பு

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான பதிவு 16.85% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 20.59 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 24,06,079 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இந்த ஆண்டு 1029154 மாணவர்களும் 1376831 மணவிகளும் தேர்வு எழுதினர். 

NEET 2024 Results: பிரிவு வாரியாக தேர்ச்சி நிலைமை எப்படி உள்ளது?

பிரிவு வாரியாக பார்த்தால், இந்த ஆண்டு பொதுப்பிரிவில் 333932 பேரும், EWS பிரிவில் 116229 பேரும், ஓபிசி பிரிவில் 618890 பேரும், எஸ்சி பிரிவில் 178738 பேரும், எஸ்டி பிரிவினர் 68479 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

NEET 2024 Results: கவுன்சிலிங் எப்போது தொடங்கும்?

மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களுக்கு கவுன்சிலிங்கை நடத்துகிறது. மீதமுள்ள 85 சதவீத சேர்க்கைக்கு அனைத்து மாநிலங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பாக உள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சீட் மேட்ரிக்ஸ் மற்றும் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலைப் பார்க்க mcc.nic.in என்ற MCC -யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் அட்டவணையை என்டிஏ விரைவில் அறிவிக்கும். கடந்த ஆண்டு, நீட் யுஜிக்கான முதல்கட்ட கவுன்சிலிங் ஜூலை 20ம் தேதி தொடங்கியது.

மேலும் படிக்க | மத்தியில் கூட்டணி ஆட்சி... பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!

NEET 2024 Results: கவுன்சிலிங்கிற்கு தேவையான ஆவணங்கள்

- NEET UG 2024 அட்மிட் கார்ட் மற்றும் ரேங் கார்ட்

- NEET UG 2024 விண்ணப்பத்தின் நகல்

- பத்தாம் வகுப்பு தேர்வு மார்க்‌ஷீட் மற்றும் தேர்ச்சி சான்றிதழ்

- 12ஆம் வகுப்பு மார்க்‌ஷீட் மற்றும் தேர்ச்சி சான்றிதழ்

- பிறப்பு சான்றிதழ்

- சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)

- ப்ரொவிஷனல் அலாட்மெண்ட் லெட்டர்

- ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது பாஸ்போர்ட் போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்று

- பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

- முகவரி ஆதாரம்

- இடம்பெயர்வு சான்றிதழ் (டிசி)

NEET 2024 Results: ராஜஸ்தானில் இருந்து பெரும்பாலான டாப்பர்கள்

NEET UG தேர்வில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மாநிலங்களைப் பற்றி பேசுகையில், இந்த ஆண்டு ராஜஸ்தானில் இருந்து அதிகபட்சமாக 11 பேர் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மேலு படிக்க | Lok Sabha Election Result: ஹாட்டிரிக் அடித்த NDA...மோடி அலையை தடுத்த INDIA கூட்டணி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News