டெல்லி உச்சநீதிமன்றம் சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை கேள்வி கேட்கவோ, பிரிக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. அவர்களை பிரிக்க முயற்சி செய்வது சட்டவிரோதமானது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
சாதி மறுப்புத் திருமணம் செய்தவரை கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ எந்த சர்ச்சையையும் ஏற்படுத்த கூடாது என்று அவர்களுக்கு உரிமை கிடையாது என்றும் கூறியுள்ளது. பிள்ளைகளை பெற்றவருக்கே இதை கேட்கும் உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு உடனடியாக காதல் திருமணம் செய்வோரைக் காக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்ய மத்திய அரசு தவறினால் கோர்ட் தலையிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.