அனல்மின் கொதிகலன் வெடிப்பு: பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு

Last Updated : Nov 2, 2017, 01:31 PM IST
அனல்மின் கொதிகலன் வெடிப்பு: பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு title=

உத்தரபிரதேச மாநிலத்தில் தேசிய அனல்மின் நிலையத்தின் பெரோஸ் காந்தி மின் உற்பத்தி நிலையம் நேற்று எதிர்பாராதவிதமாக வெடித்ததில் பலி எண்ணிக்கை 26- ஆக உயர்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அமைத்துள்ள தேசிய அனல்மின் நிலையத்தில் 6 மின் உலைகள் உள்ளன. அவற்றில், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உலை ஒன்றில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது பலத்த சத்தத்துடன் வெடித்தது. அதன் அருகில் இருந்தவர்கள் பலர் அதே இடத்தில் பலி ஆனார்கள். பலர் பலத்த தீ காயம் அடைந்தார்கள். மற்ற தொழிலாளர்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடினர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்தவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் இதுவரை 26 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்துள்ளனர்.

அந்தமாநில முதல் - அமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளிநாட்டில் இருப்பதால், துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா சம்பவ இடத்திற்கு செல்கிறார்.

இந்த சம்பவத்தில் இறந்தவரின் ரூ. 2 லட்சம் ரூபாயும், கடுமையாக பாதிக்கப்பட்டவோருக்கு 50,000 ரூபாயும், காயத் அடைந்தவோருக்கு 25,000 ரூபாயும்  வழங்க உத்தரபிரதேச மாநில முதலைமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

Trending News