பிரதமர் மோடி இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடவுள்ளார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து கடந்த 8 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் மத்தியில் தீபாவளியை கொண்டாடி வருகிறார்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 17, 2022, 07:20 PM IST
  • பத்ரிநாத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்து பார்வையிடுகிறார்.
  • தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கிறார்.
பிரதமர் மோடி இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார்! title=

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டும் நாட்டு வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடவுள்ளார். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கிறார். அப்போது, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கும் பிரதமர் மோடி செல்லவுள்ளார். அவர் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் உத்தரகாண்ட் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தீபாவளிக்கு முன், கேதார்நாத்தில் பிரதமர் மோடி செல்லவுள்ளார்.

தனது பயணத்தின் போது, கேதார்நாத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார். கேதார் நாத்தில் தரிசனம் செய்த பிறகு, அன்றைய தினம் பிரதமர் மோடி பத்ரிநாத்திற்கு  செல்கிறார். அக்டோபர் 21ஆம் தேதி இரவு பத்ரிநாத்தில் ஓய்வெடுக்கிறார். அங்கு இரவு தங்கிவிட்டு மறுநாள் அதாவது அக்டோபர் 22-ம் தேதி பத்ரிநாத் தரிசனம் செய்வார்.

பத்ரிநாத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி ஆய்வு செய்து பார்வையிடுகிறார். இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் போல அக்டோபர் 24-ம் தேதி, பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து கடந்த 8 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் மத்தியில் தீபாவளியை கொண்டாடி வருகிறார்.

மேலும் படிக்க | முகாந்திரம் இல்லை - ஆ.ராசா மீதான வழக்கு தள்ளுபடி 

பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். 2016-ம் ஆண்டு தீபாவளி கொண்டாடுவதற்காக ஹிமாச்சல பிரதேசத்தின் சாங்கோ கிராமத்திற்கு வந்திருந்தார். இதற்குப் பிறகு, 2017 இல், அவர் தீபாவளியைக் கொண்டாட ஜம்மு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்குக்குச் சென்றார். 2018 ஆம் ஆண்டில், அவர் தீபாவளியைக் கொண்டாட உத்தரகாண்டில் உள்ள ஹர்சிலை அடைந்தார்.

2019-ம் ஆண்டு மீண்டும் பிரதமரான பிறகு, தீபாவளியைக் கொண்டாட ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி சென்றடைந்தார். இதேபோல், லோங்கேவாலா போஸ்டில் (ராஜஸ்தான்) நியமிக்கப்பட்ட வீரர்களுடன் 2020 தீபாவளியைக் கொண்டாடினார். கடந்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்ஷேராவில் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

மேலும் படிக்க | ஆம் அவருக்கும் எனக்கும் பிரச்னைதான் - தமிழிசை ஓபன் டாக் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News