புதுடில்லி: ஜி -7 மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸில் உள்ள இந்தியர்கள் முன்பு உரையாற்றினார். அப்பொழுது இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான நட்பை யாரும் உடைக்க முடியாதது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உலகின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தியாவும் பிரான்சும் ஒன்றாக இருந்தன. என்ன நடந்தாலும் இரு நாடுகளின் நட்பு ஒன்றாக இருக்கும் எனவும் கூறினார்.
பாரீசில் வசித்து வரும் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயங்கள்...!!
பாரீசில் வசித்து வரும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற வந்த போது, அங்கிருந்தவர்கள், "மோடியால் முடியாதது எதுவும் இல்லை. அவரால் அனைத்து செய்ய முடியும்" என்று கோசங்களை எழுப்பினார்கள்,
அதுக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இந்த முறை நாட்டு மக்கள் முன்பை விட அதிக அளவில் பெரும்பான்மையை கொடுத்து நமது அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளனர். மீண்டும் ஒரு முறை நாட்டுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெறும் ஆட்சி மற்றும் நடத்த மக்கள் வாக்களிக்க வில்லை. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு வாக்களித்துள்ளனர் எனக் கூறினார்.
நாகரிகமும் கலாச்சாரமும் நிறைந்த ஒரு புதிய இந்தியா உலகம் முழுவதையும் பெருமைப்படுத்துகிறது. அத்தகைய ஒரு புதிய இந்தியாவின் கவனம் வியாபாரம் செய்வதில் மட்டுமில்லை, மகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றத்தில் இளைஞர், கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியவை பயனடைந்து உள்ளனர்.
முஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை புதிய இந்தியா எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். முஸ்லீம் பெண்களுக்கு முத்தலாக் மூலம் சுதந்திரம் வழங்கப்பட்டது.
இந்தியாவில் உழல் செய்தவர்களுக்கு சிவப்பு அட்டைகளை (Red Alert) வழங்கி வருகிறோம். புதிய இந்தியாவில் பொதுப்பணம் கொள்ளையடிக்கப்படவில்லை. புதிய இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை.
செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரயன் 2 சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும்.இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான நட்பு இலட்சிய மதிப்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் தற்காலிக ஏற்பாடு இல்லை. 70 ஆண்டுகளாக தற்காலிக நன்மைகளை அளித்து வந்தவர்களை அகற்றிவிட்டோம். இதை நினைத்து சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று எனக்கு புரியவில்லை.
ஊழல் செய்தவர்களை சரியான இடத்திற்கு கொண்டு செல்கிறோம். நிரந்தர ஏற்பாடுகளுடன் நாடு முன்னேறிச் செல்லுகிறது. தொடர்ந்து இலக்கை அடையும்.
இவ்வாறு பாரீசில் வசித்து வரும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.