பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள்!

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

Last Updated : Feb 19, 2019, 12:01 PM IST
பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள்! title=

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேலும் மத்தியப்பிரதேசத்தில் விளையும் தக்காளிக்கு பாகிஸ்தானில் வரவேற்பு இருந்தது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது மத்தியப்பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் பெத்லவாட் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். 

Trending News