தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - பஞ்சாப் முதல்வர்

தீ விபத்து ஏற்பட்ட லூதியானா தொழிற்சாலை பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங் பார்வையிட்டார். 

Updated: Nov 21, 2017, 04:16 PM IST
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - பஞ்சாப் முதல்வர்
Pic Courtesy : ANI

தீ விபத்து ஏற்பட்ட லூதியானா தொழிற்சாலை பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங் பார்வையிட்டார். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

பஞ்சாபில் லூதியானா தொழிற்சாலைப் பகுதியில் சூஃபியா சௌக் அருகில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையில் திடீர் என்று நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்து 10 தீயணைப்பு வாகனம் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தது. தீ விபத்தில் சிக்கியவர்கள் பலரை தீ அணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். 

மேலும், இதைக்குறித்து பஞ்சாப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தீ விபத்தில் ஏற்பட்ட பகுதியை பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங் பார்வையிட்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். தீ விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்படுவார்கள். இதைக்குறித்து விசாரிக்க ஒரு கமிஷனை உருவாக்கியுள்ளோம். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறினார்.