Rahul Gandhi in Manipur: ராகுல் காந்தியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது -காரணம் என்ன?

Rahul Gandhi in Manipur: வழியில் வன்முறை நடக்கலாம்.. பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் காந்தி சுராசந்த்பூர் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 29, 2023, 06:02 PM IST
  • பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் காந்தி சுராசந்த்பூர் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
  • இன்று இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி மணிப்பூர் சென்றுள்ளார்.
  • வன்முறையில் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளனர். 419 பேர் காயமடைந்துள்ளனர்.
Rahul Gandhi in Manipur: ராகுல் காந்தியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது -காரணம் என்ன? title=

மணிப்பூரில் ராகுல் காந்தி: அரசு ஹெலிகாப்டர் மூலம் மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூருக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். இங்குள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசினார். அதற்கு முன்னதாக இன்று காலை அவர் வன்முறையால் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் நிவாரண முகாமுக்குச் செல்ல விரும்பினார். ஆனால் 34 கி.மீ.க்கு முன்பு விஷ்ணுபூரில் அவரது வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். வழியில் வன்முறை நடக்கலாம் என்று போலீசார் கூறியதை அடுத்து, அவர் இம்பாலுக்குத் திரும்பி சென்றார். 

ராகுலுக்கு எதிர்ப்பும், ஆதரவும்: 
பிஷ்னுபூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டதாகவும், சில கற்கள் வாகனங்கள் மீது வீசப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஷ்ணுபூரில் ராகுல் காந்தியின் வாகனம் நிறுத்தப்பட்டது. ராகுலின் வாகனம் நிறுத்தப்பட்டதையடுத்து, இங்கு ஒரு குழு அவருக்கு ஆதரவாகவும், மற்றொரு குழு அவருக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

மேலும் படிக்க - Manipur: மீண்டும் பெட்ரோல் குண்டுவீச்சு! 20 நாட்களில் 4 அமைச்சர்கள்-எம்எல்ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு

ராணுவத்தினர் பதிலடி: 
இதற்கிடையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் அதிகாலை 5:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ராணுவம் கூறியுள்ளது. ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தை அடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது.

ஜூன் 30-ம் தேதி வரை ராகுல் காந்தி மணிப்பூரில் இருப்பார்:
இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி, அங்கு உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று சிவில் சமூக தலைவர்களை ராகுல் சந்திக்க உள்ளார். அவர் ஜூன் 30 வரை மணிப்பூரில் இருப்பார். மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் ஒக்ரம் இபோபி சிங் கூறுகையில், மூத்த குடிமக்கள் மற்றும் பிற தலைவர்களையும் ராகுல் சந்திக்கும் திட்டம் உள்ளது எனக்கூறினார்.

மேலும் படிக்க - மணிப்பூர் வன்முறை முடிவுக்கு வரவில்லை என்றால் பதக்கத்தை திருப்பி தருவோம் 11 வீரர்கள் கடிதம்

மணிப்பூர் வன்முறையில் 131 பேர் உயிரிழந்துள்ளனர்:
மே 3 முதல் மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தே சமூகத்தினருக்கு இடையே வன்முறை நடந்து வருகிறது. வன்முறையில் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 419 பேர் காயமடைந்துள்ளனர். 65,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆறாயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் வன்முறை குறித்து சோனியா காந்தி கூறியது:
மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று (ஜூன் 28, புதன்கிழமை) காணொலிச் செய்தியை வெளியிட்டார். அதில் சோனியா கூறுகையில், இந்த வன்முறை நீங்கள் (பாஜக) ஆட்சி செய்யும் மாநிலத்தில் (மணிப்பூர்) மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளையும் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக ஆக்கப்பட்டு உள்ளனர். இந்த வன்முறை நம் தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது எனக்கூறியிருந்தார்.

இணையதளத் தடை நீட்டிப்பு:
மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் ஜூன் 30 வரை இணையதளத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - மணிப்பூர் கலவரத்தில் தடை செய்யப்பட்ட சீன பைக்குகள்... இந்தியாவிற்கு வந்தது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News