ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏ. தேவிந்தர் குமார் ஷெராவத் இன்று பாஜகவில் இணைந்தார்!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு விறு விருப்பாக நடை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரச்சரம் சூடு பிடித்து வருகின்றது.
இந்நிலையில், டெல்லியின் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு குதிரை பேரம் நடத்தி வருவதாகவும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு பத்து கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிகப்பட்டுள்ளதாகவும் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமை மீது அதிருப்தி அடைந்திருக்கும் 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக டெல்லி பாஜக முன்னாள் தலைவரும் மத்திய மந்திரியுமான விஜய் கோயல் குறிப்பிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பிஜ்வாசன் தொகுதி எம்.எல்.ஏ. தேவிந்தர் குமார் ஷெராவத் இன்று விஜய் கோயல் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். இந்த சம்பவம் அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Delhi: Rebel AAP MLA Devinder Kumar Sehrawat joins Bharatiya Janata Party (BJP) in presence of Union Minister Vijay Goel. pic.twitter.com/DD5P3rVYLJ
— ANI (@ANI) May 6, 2019