கோழைகளால் கீழ்படிய செய்ய முடியாது ‘ரைசிங் காஷ்மீர்’ முதல் பக்கத்தில் பத்திரிக்கையாளருக்கு அஞ்சலி!!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகர் பகுதியிலிருந்து `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி காரில் வீட்டுக்குத் சென்றுகொண்டிருந்த போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.
இந்தத் தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரின் பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
The show must go on. As Shujaat would have wanted it to. This is today’s @RisingKashmir issue. That Shujaat’s colleagues were able to bring out the paper in the face of insurmountable grief is a testament to their professionalism & the most fitting tribute to their late boss. pic.twitter.com/ADP70D4F1q
— Omar Abdullah (@OmarAbdullah) June 14, 2018
இந்தநிலையில், புஹாரியை சுட்டவர்கள் என்று சந்தேகப்படுவர்களின் சி.சி.டி.வி கேமரா எடுத்தப் புகைப்படத்தை அம்மாநில காவல்துறை வெளியிட்டது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி,முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்ட ஏராளமானோர், சுஜாத் புஹாரியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Jammu & Kashmir: National Conference leader Omar Abdullah visits residence of Rising Kashmir editor #ShujaatBhukhari, in Baramulla, who was shot dead by terrorists in Srinagar last night. pic.twitter.com/32thNyOCq7
— ANI (@ANI) June 15, 2018
இதனையடுத்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, உயிரிழந்த சுஜாத் புஹாரிக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு சுஜாத் புகாரியின் உடலுக்கு உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர் சுஜாத் புகாரி இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.