சபரிமலையில் இ-உண்டியல் சேவை துவக்கம்

கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதமிருந்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ள ரூபாய் நோட்டு மாற்றத்தால் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இ-உண்டியல் சேவை வசதியை சபரிமலை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Last Updated : Nov 24, 2016, 03:03 PM IST
சபரிமலையில் இ-உண்டியல் சேவை துவக்கம் title=

திருவனந்தபுரம்: கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதமிருந்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ள ரூபாய் நோட்டு மாற்றத்தால் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இ-உண்டியல் சேவை வசதியை சபரிமலை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு அதிகாரி அஜய் தரயில் "டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்த எந்தவித தடையுமில்லை. காணிக்கையாக 1 ரூபாய் கூட பக்தர்கள் செலுத்தலாம்" என்று கூறினார்.

ஐயப்ப பக்தர்கள், துளசி மணிமாலை மற்றும் கருப்பு, நீலம், காவி வேஷ்டி அணிந்து தினமும் காலை மற்றும் மாலையில் நீராடி, ஐயப்பனை வணங்கி வருகிறார்கள்.  மாத காலம் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜைக்கு நாடு முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News