Mrs World: மிஸஸ் வோர்ல்ட் பட்டம் வென்றார் இந்தியா! மகுடம் சூடிய அழகி சர்கம் கெளஷல்

Mrs World 2022 Sargam Koushal: அழகிப்போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் மகுடம் வென்றுள்ளார். மிஸஸ் வோர்ல்ட் என்ற பட்டத்தை  21 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற பெண் என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார் திருமதி சர்கம் கெளஷல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 19, 2022, 10:11 AM IST
  • 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு அழகிப் பட்டம்!
  • கிரீடம் வென்றார் சர்கம் கெளஷல்
  • திருமதி அழகி பட்டத்தை வென்ற மிசஸ் சர்கம் கெளஷல்
Mrs World: மிஸஸ் வோர்ல்ட் பட்டம் வென்றார் இந்தியா! மகுடம் சூடிய அழகி சர்கம் கெளஷல் title=

 லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற அழகிப்போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் மகுடம் வென்றுள்ளார். மிஸஸ் வோர்ல்ட் என்ற பட்டத்தை  21 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற பெண் என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார் திருமதி சர்கம் கெளஷல். திருமணமான பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் அழகிப்போட்டி லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mrs. India Inc (@mrsindiainc)

இந்த உலகப்பட்டத்திற்கான போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 63 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சர்கம் கெளஷல் என்பவரும் கலந்து கொண்டார்.

போட்டியின் பல்வேறு கட்ட நிலைகளை கடந்து மிஸஸ் வோர்ல்ட் என்ற பட்டத்தை பெற்ற இந்திய பெண் சர்கம் கெளஷல்.  இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | FIFA World Cup: 36 ஆண்டுகளுக்கு பின் 3ம் முறையாக ஃபீபா கோப்பையை அர்ஜென்டீனா வென்றது

நீண்ட கால காத்திருப்பு முடிவடைந்து விட்டது. 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்தியாவுக்கு கிரீடம் கிடைத்து விட்டது. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்... ஐலவ்யூ இந்தியா, ஐலவ்யூ வேர்ல்ட் என பதிவிட்டு உள்ளார்.

ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ள சர்கம் கெளஷல், விசாகப்பட்டினத்தில் ஆசிரியராக பணிபுரிந்தவர். திருமதி சர்கம் கெளஷலின் கணவர் இந்திய கப்பல் படையில் பணிபுரிகிறார்.

மேலும் படிக்க | 347 கோடி ரூபாய் பரிசுத் தொகை யாருக்கு? வெற்றி நாயகன் மெஸ்ஸி?

திருமணமான பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் அழகிப்போட்டி கடந்த 1984 ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. முதலில் இப்போட்டி மிஸஸ் வுமன் என்றழைக்கப்பட்டது. பின்னர் 1988-ல் மிஸஸ் வேர்ல்டு என்றழைக்கப்பட்டது.

கடந்த 2001 ம் ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் அதிதி கோவித்கர், மிஸஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். அதன் பிறகு இந்தப் பட்டத்தை இந்தியாவின் சார்பில் யாரும் இதுவரை வெல்லவில்லை. தற்போது, இந்தியாவிற்கு, இந்த பட்டம் இரண்டாவது முறையாக கிடைத்துள்ளது. 

தற்போது திருமதி அழகி பட்டம் வென்றுள்ள சர்கம் கெளஷலுக்கு முன்னாள் அழகி திருமதி அதிதி கோவித்கர், தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க | FIFA World Cup Final 2022: முதல் உலகக்கோப்பையை முத்தமிட்டார் மெஸ்ஸி... அர்ஜென்டினா சாம்பியன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News