கர்நாடக பாடப் புத்தகத்தில் சாவார்க்கர் - பறவையில் பறந்ததாக தகவல் - விளக்கமும், சர்ச்சையும்!

Savarkar Flew In A Bird : சாவார்க்கர் என்றவுடன் அந்தமான் சிறையில் மன்னிப்புக் கடிதம் எழுதிய சம்பவம் ஞாபகத்து வந்த நிலையில், இனி பறவையில் பறந்த சாவர்க்கர் என்று தோன்றும் அளவுக்கு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.    

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Aug 30, 2022, 12:56 PM IST
  • சர்ச்சைகளில் சிக்கும் சாவர்க்கர் கதைகள்
  • புல் புல் பறவையில் பறந்தாரா சாவர்க்கர் ?
  • கர்நாடகா பாட புத்தக குழுவினர் புதிய விளக்கம்
கர்நாடக பாடப் புத்தகத்தில் சாவார்க்கர் - பறவையில் பறந்ததாக தகவல் - விளக்கமும், சர்ச்சையும்! title=

கடந்த 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ள முகப்பை தேசியக் கொடியாக மாற்றுங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முன்வைத்த ஓர் கேள்வி என்னவெனில், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவார்களா என்பதுதான்.?!

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றுவார்களா என்ற கேள்விக்கும், சாவார்க்கருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?

மேலும் படிக்க | RSS அலுவலகத்தில் பிரதமர் கொடியேற்றுவாரா? தொல் திருமாவளவன் கேள்வி

தேசியத்தை வலியத் திணிக்கும் பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் ஆகியவை இந்திய சுதந்திரத்திற்காக செய்தது என்ன ? என்று கேள்வியின் மீது நடைபெறும் உரையாடலில் இருந்து வரலாம். இக்கட்டான சுதந்திர காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிதா மகனான சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்துகொண்டிருந்ததாகவும், அப்போது பிரிட்டிஷாரிடம் பலமுறை மன்னிப்புக் கடிதம் எழுதி விடுதலையாகி வந்ததாகவும் எதிர்க்கட்சிகள் பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கான ஆவணங்களையும் அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் பாஜக விளக்கம் அளித்தது. ஆனாலும், பலமுறை மன்னிப்புக் கடிதம் எழுதி சிறையில் இருந்து வெளிவந்ததாகக் கூறப்படும் சாவர்க்கரை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் வீர சாவர்க்கர் என்றே அழைத்து வருகின்றனர். 

இதனைக் கிண்டல் செய்யும் வகையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, சாவர்க்கரை சீண்டினார். அதில், ‘நான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்கமாட்டேன். ஏனெனில் என் பெயர் சாவர்க்கர் அல்ல. ராகுல்காந்தி’ என்று கூறினார்.

இதுபோல், பல இடங்களில் இந்தியாவின் எதிர்க்கட்சிகள் சாவர்க்கர் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தற்போது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய பாஜகவினர் கொண்டுவந்துள்ள பாடத்திட்டத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில், கர்நாடக பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் இடம்பெற்றுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் பற்றி ஒரு கருத்து இடம்பெற்றுள்ளது. என்னவென்றால், சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை என்றும், ஆனால் அந்த அறைக்கு அன்றாடம் புல்புல் பறவைகள் வந்து செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புல்புல் பறவையின் இறகுகளில் ஏறி ஒவ்வொருநாளும் தன் தாய்நாட்டை தரிசிப்பதற்காக சாவர்க்கர் வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தமான் சிறையில் பலமுறை மன்னிப்புக்கடிதம் எழுதி விடுதலையான சாவர்க்கர் எப்படி சிறையில் இருந்தபடி பறவையில் பறந்தார் என்று விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்துள்ள கர்நாடக பாடப்புத்தக்கத்தின் குழுவினர், அந்த வரிகள் கவித்துவமான வரிகள் என்றும், அதனை ரசிக்கத் தெரியவில்லையே என்பது அதிசயமாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சாவர்க்கர் பறவை மீது பறந்தார் என்பதை அப்படியே பொருள்கொள்ளாமல் அதன் கவிநயத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க | கர்நாடகாவில் பெரியார், நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கம்

கர்நாடகாவில் நடக்கும் இந்த சர்ச்சைகள் குறித்துப் பேசிய அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார், பாடத்திட்டத்தில் உள்ளது புதிய கல்விக் கொள்கையா அல்லது ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்விக் கொள்கையா என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News