SII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் நிறுவனம், COVISHIELD கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 21, 2021, 10:59 PM IST
  • உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் நிறுவனம், COVISHIELD கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
  • மஞ்சரி ஆலை வளாகத்தில் தடுப்பூசி தொடர்பான வேலைகள் நடைபெறவில்லை.
  • கண்ணாடிகளை உடைத்து கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
SII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு title=

புனேயில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் (SII)  இன்று, பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் நிறுவனம், லட்சக்கணக்கான அளவில், COVISHIELD கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது.

மஞ்சரி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து, தடுப்பூசி உற்பத்தி பாதிக்காது என்று நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். "தீ விபத்து தடுப்பூசி உற்பத்தியை பாதிக்காது. SII மஞ்சரி ஆலை வளாகத்தில் தடுப்பூசி தொடர்பான வேலைகள் நடைபெறவில்லை.  அந்த வளாகத்தில் தடுப்பூசி சேமித்து வைக்கப்படவில்லை. தடுப்பூசி உற்பத்தி தீ பிடித்த இடத்திற்கு வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு வளாகத்தில் நடந்து வருகிறது. எனவே கவலைப்பட ஒன்றுமில்லை, " அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த தீவிபத்தில் 5 பேர் இறந்தனர். விபத்திற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட வெல்டிங் பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இது குறித்து டிவிட்டரில் தகவல் அளித்த சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சைரஸ் பூனாவாலா, “எங்களுக்கு சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சம்பவத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. நாங்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறோம். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான SII, விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ .25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது.

இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கண்ணாடிகளை உடைத்து கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், தீயணைக்கும் பணி மற்றும் மீட்பு பணியில் உதவ தேசிய பேரிடர் நடவடிக்கை (NDRF) குழுவும் ஈடுபட்டுள்ளது.

ALSO READ | தீ விபத்தினால் கோவிஷீல்ட் உற்பத்தி பாதிக்கப்படாது: SII

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News