மத்திய தகவல் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்பு!

மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக, சுதிர் பார்கவா பதவி ஏற்றுக்கொண்டார்!

Last Updated : Jan 1, 2019, 04:42 PM IST
மத்திய தகவல் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்பு!

மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக, சுதிர் பார்கவா பதவி ஏற்றுக்கொண்டார்!

RTI எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை பெற உதவும் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் உள்பட 11 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 3 தகவல் ஆணையர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்குகளில், இந்த விவகாரம் சுட்டி காட்டப்பட்டதை அடுத்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் வேண்டும், இந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கையாளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, புதிதாக மேலும் 4  தகவல் ஆணையர்களை மத்திய அரசு நியமித்து ஆணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து யாஷ்வர்தன் குமார் சின்கா, வனஜா என்.சர்னா, நீரஜ் குமார் குப்தா, சுரேஷ் சந்திரா ஆகிய 4 தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.

இதற்கிடையில், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர் பணி ஓய்வு பெற்ற நிலையில் அந்த பதவிக்கான புதிய தலைமை ஆணையராக சுதிர் பார்கவா பெயர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சுதிர் பார்கவா பதவியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

More Stories

Trending News