கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்திய வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்!
புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த் போட்டியில் கலந்து கொள்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் போட்டிகளில் விளையாடுவது குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக BCCI ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க உத்தரவிட்டது. ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டும் அவர் மீதான தடையை நீக்க பி.சி.சி.ஐ. மறுத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை முடிந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் அந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்துள்ளது.
Spot fixing case: Supreme Court asked the BCCI to reconsider its order of life ban on S Sreesanth (file pic) pic.twitter.com/fgF3iAUDx7
— ANI (@ANI) March 15, 2019
ஐபிஎல் சூதாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஶ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் இதுகுறித்து 3 மாதத்தில் பரிசீலித்து முடிவெடிக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.