பாஜக அரசு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் உறுதியாக உள்ளது என்று உள் துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆன நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது என உள்துறை இணை அமைச்சர் கூறினார்.
அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி, அனைவர் மனதிலும் நம்பிக்கை ஏற்படுத்துதல் என்ற கொள்கையின் அடிப்படையில் மோடி அரசு செயல்படுகிறது என்று அமைச்சர் நித்தியானந்த ராய் மேலும் கூறினார். அவர் பீஹாரில் உள்ள உஜியார்பூரில் நடத்தப்பட்ட ஒரு மெய்நிகர் பேரணியில் உரையாற்றினார்.
முற்பட்ட வகுப்பினரில், பொருளாதாரரீதியாக பின்தங்கி உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மோடி இட ஒதுக்கீட்டு முறையை பாஜக அரசு மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று உள் துறை இணையமைச்சர் கூறினார்
மேலும் படிக்க |கிண்டர் கார்டன் ஆன்லைன் வகுப்பில் கர்ஜிக்கும் புலிகள்… அசத்தும் கேரள ஆசிரியர்..!!
இட ஒதுக்கீட்டை BJP என்றுமே ஆதரித்து வந்ததோடு மட்டுமல்லாமல், நீதியுடன் கூடிய வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் பணியாற்றி வருவதாக அமைச்சர் நித்தியானந்தா ராய் கூறினார்.
1977 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன், 1979ஆம் ஆண்டு. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக அறிக்கை அளித்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதை நடமுறைக்கு கொண்டு வருவதில் தாமதப்படுத்தியது. 1990 ஆம் ஆண்டு பாஜக கட்சி அப்போதிருந்த அரசுக்கு அளித்த ஆதரவை அடுத்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.
தற்போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை தாமதம் செய்த கட்சிகளுடன் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி கைகோர்த்துள்ளது என அவர் விமர்சனம் செய்தார்.
பயங்கரவாதத்தை ஒடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் மோடி அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று ராய் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | Sopore என்கவுண்டர்: பயங்கரவாதிகள் பெரிய தாக்குதல் நடத்த இருந்ததாக அதிர்ச்சி தகவல்
காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து வளர்த்து வந்தது, ஆனால், மோடி ஆட்சியில் அவர்களுக்கு புல்லட்கள் கொடுக்கப்படுகின்றன என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்தார்.
பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் இந்த வருடம் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மெய்நிகர் பேரணிகள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.