மும்பை: மற்றொரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்தேறியது,14 வயது சிறுவன் ஒருவன் சனிக்கிழமை தனது ஏழு தளம் ஆந்தேரி கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மன்ரிபீத் சிங் என்ற சிறுவன், 'நீல திமிங்கலம்' என்று அழைக்கப்படும் ஆன்லைன் வீடியோ விளையாட்டிற்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது, இந்த விளையாட்டில் நிர்வாகி குழு இருபதாகவும், போட்டியில் பங்கேற்பவர் நிர்வாகி குழு கொடுக்கும் 5௦ கட்டளை பணிகளை செய்யவேண்டும். இறுதி கட்டத்தை எட்டிய பிறகு, பங்கேற்பாளர்கள் இப்போட்டியை வெல்ல தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த அச்சிறுவனின் அண்டை வீட்டார் கூறுகையில், அந்த சிறுவன் தனது மாடிக்கு மாலை 5 மணியளவில் சென்றாதகவும், அவரது மொபைல் ஃபோன் கேமராவில் முழு வீடியோவைக் பதிவு செய்ததாகவும், பின் உடனடியாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆணையர் என்.டி. ரெட்டி கூறியது: சாட்சி அறிக்கை பதிவு செய்யப்பட்டு, எடிஆர் (விபத்து மரண அறிக்கை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளைஞனின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக அவர்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.
நீல திமிங்கல விளையாட்டு என்றால் என்ன?
ஆபத்தான நீல திமிங்கலம் விளையாட்டு அல்லது நீல திமிங்கிலம் சவால் என்பது ரஷ்யாவில் உருவானது. பங்கேற்கும் வீரர்கள் 50 கட்டளை பணிகளைத் தொடர்ச்சியாக செய்யவேண்டும், இறுதிகட்டமனது மரணத்தில் முடிவடையும். போட்டியின் பங்கேற்பாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்யப்பட்ட சவால்களின் புகைப்படங்களினை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
திகில் திரைப்படம் பார்த்தல், அசாதாரண மணி நேரங்களில் விழித்துகொள்ளுதல் போன்றவை இந்த கட்டளைகளுக்குள் அடங்கும்.
இந்த விளையாட்டு பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் பறித்துள்ளது. எனினும், மும்பை ஆந்தேரியில் நடந்த இந்த தற்கொலை இந்தியாவில் முதல் நிகழ்வு ஆகும்.