தலை வேண்டுமா வேண்டாமா?... லீனா மணிமேகலையை மிரட்டும் சாமியார்

காளி பட போஸ்டர் தொடர்பாக லீனா மணிமேகலையை உத்தரப் பிரதேசம் சாமியார் மிரட்டியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 6, 2022, 03:21 PM IST
  • காளி படத்தை இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கியுள்ளார்
  • லீனா மணிமேகலை மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது
தலை வேண்டுமா வேண்டாமா?... லீனா மணிமேகலையை மிரட்டும் சாமியார் title=

கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை காளி என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இதன் போஸ்டரானது சில நாள்களுக்கு முன்பு வெளியானது.

அந்தப் போஸ்டரில் காளி கெட்டப்பில் இருந்த பெண் வாயில் சிகரெட்டுடனும், கையில் எல்ஜிபிடி கொடியுடனும் இருந்தார். இதனைக் கண்ட சிலர் லீனா மணிமேகலைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

Leena Manimekalai

பாஜகவைச் சேந்த ஹெச். ராஜா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “#ArrestLeenaManimekalai for scandalising MaaKaali என பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, ஒட்டாவா இந்திய உயர் ஆணையம் இதுகுறித்து வெளியிட்ட  அறிவிப்பில், ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 'அண்டர் தி டெண்ட்' நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு திரைப்பட போஸ்டரில் இந்து கடவுளை அவமரியாதையாக சித்தரித்ததாக கனடாவில் உள்ள இந்து குழுக்களின் தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

மேலும் படிக்க | சாமியார் ஆனார் திண்டுக்கல் லியோனி

டொரோண்டோவில் உள்ள எங்கள் துணைத் தூதரகம் இது குறித்து நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. எனவே கனடா அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பட்டாளார்கள் சர்ச்சைக்குரிய அந்த திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கூறியிருந்தது. 

 

இதனையடுத்து ஹெச்.ராஜா இந்திய உயர் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்தார். இதற்கிடையே, மஹூவா மொய்த்ரா லீனா மணிமேகலைக்கு ஆதரவான கருத்தை கூறியிருந்தார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள அனுமான் கோயிலில் இருக்கும் சாமியார் ராஜூ தாஸ் மகாந்த் என்பவர் லீனா மணிமேகலையை மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க | சோழர்கள் சிவ பக்தர்களா? திருமால் பக்தர்களா?! சர்ச்சையில் சிக்கிய பொன்னியின் செல்வன்

அந்த வீடியோவில், “சமீபத்திய நிகழ்வுகளை பாருங்கள். நுபுர் சர்மா சரியான விஷயங்களை கூறியபோதும் அவரது கருத்து என்பது இந்தியா, உலகம் முழுவதும் நெருப்பை கிளப்பியுள்ளது. ஆனால் நீங்கள் சனாதன தர்மத்தை அவமதிக்க விரும்புகிறீர்களா?. 

உங்கள் தலையை உடலிலிருந்து பிரிக்க விரும்புகிறீர்களா? இதுவா உங்களுக்கு வேண்டும்? இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றிபடத்துக்கு தடை விதிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் கடினமான சூழல் ஏற்படுத்தப்படும்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News