குற்றவாளி என நிரூபணமானால் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அஸாம் கான்

நடிகை ஜெயப்பிரதா குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அஸாம் கானுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Apr 15, 2019, 10:26 AM IST
குற்றவாளி என நிரூபணமானால் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அஸாம் கான் title=

நடிகை ஜெயப்பிரதா குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அஸாம் கானுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது!!

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புர் தொகுதியில் அஸாம் கானுக்கு எதிராக பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதாவை போட்டியாக நிறுத்தியுள்ளது. சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய  அஸாம் கான், ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக இதைவிட தரக்குறைவான அரசியல் வேறு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், காக்கி என்று அவர் குறிப்பிட்டது RSS தொண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை என சமாஜ்வாதி தெரிவித்துள்ளது. 

இது குறித்து அஸாம் கான் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,  ஜெயாவின் பெயரை தான் குறிப்பிடவில்லை என்றும் குற்றவாளி என நிரூபணமானால் தான் தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை என்றும் வலியுறுத்தினார். "ஒரு மனிதரைப் பற்றிய உண்மையான முகத்தை அறிந்து கொள்ள நேரம் எடுக்கும் என்று நான் சொன்னேன்.

பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா குறித்து நான் ஆட்சேபனைக்குரிய வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. 

வேறு ஒருவரைப் பற்றி நான் பேசினேன். தன்னிடம் 150 துப்பாக்கிகள் இருப்பதாகவும், ஆசம் கானைப் பார்த்தால் சுட்டுக்கொல்வேன் என்றும் கூறிய ஒருவரின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்துகொண்டார்கள் என்று பேசினேன். அவர் ஆர்எஸ்எஸ் கால்சட்டை அணிந்தவர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. கால்சட்டை என்பது ஆண்கள் அணிவது. 

நான் இந்த தொகுதியில் 9 முறை எம்எல்ஏவாக இருந்தவன். மந்திரியாகவும் பதவி வகித்துள்ளேன். என்ன பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும். யாருடைய பெயரையாவது நான் குறிப்பட்டு அவமதிக்கும் வகையில் பேசியதாக நிரூபித்தால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிவிடுவேன். ஊடகங்கள் எனது கருத்தை திரித்து கூறிவருகின்றன.

 

Trending News