''ஸ்டெர்லைட் ஆலை'' எதிர்ப்பு போராட்ட களத்தில் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 1, 2018, 12:33 PM IST
''ஸ்டெர்லைட் ஆலை'' எதிர்ப்பு போராட்ட களத்தில் கமல்ஹாசன் title=

இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள தூத்துக்குடிக்கு சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்ககளை சந்தித்து பேசி வருகிறார். 

அப்பொழுது அவர், நான் அரசியவாதியாகவோ, ஒரு சினிமா நடிகனாகவோ களத்திற்கு வரவில்லை. தனி மனிதனாக, உங்களில் ஒருவனாக வந்துள்ளேன் என கூறினார். மேலும் உங்கள் மூச்சு பட்ட இந்த வேப்பமரத்து காற்று எனக்கு புது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

 

 

 

 


தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அமைந்துள்ளது. 1994-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996-ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை உற்பத்தியை தொடங்கியது.

இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், வருடத்திற்கு 12 இலட்சம் டன் கந்தக அமிலமும், 2 இலட்சத்து 20 ஆயிரம் டன் பாஸ்பாரிக் அமிலமும் தயாரிக்கப்படுகிறது.

இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டபோதே, தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை நடத்தினர் 

தூத்துக்குடி ''ஸ்டெர்லைட் ஆலை'' எதிர்ப்பு: மாணவர்கள் போராட்டம்!

இந்த நிலையில், இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் அருகே மேலும் 4 இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 48 நாட்களாக ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில்  ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என பங்கேற்று வருகின்றனர். மேலும் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. 

கடந்த 29-ம் தேதி செய்தியாளர்களை சந்திப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களை சந்திக்க களத்துக்கு செல்ல இருக்கிறேன் எனக் கூறியிருந்தார்.

மத்திய அரசு நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம் -கமல்

இந்நிலையில், இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். விமானத்தில் பயணிக்கும் முன்பு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம். அதனால் மக்களுடன் சென்று நேரில் போராட்ட களத்தி கலந்துக்கொள்கிறேன் என கூறினார்.

Trending News