7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு டி.ஏ உயர்வு எப்போது? விரைவில் பம்பர் செய்தி

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வரவுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 2, 2021, 04:32 PM IST
7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு டி.ஏ உயர்வு எப்போது? விரைவில் பம்பர் செய்தி title=

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வரவுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இம்மாதம் 14 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி முடக்கத்தை நீக்குவதற்கான பெரிய முடிவு எடுக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் இந்த முடிவால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Governmemnt Employees) அகவிலைப் படி 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக அரசாங்கம் அகவிலைப்படியில் அதிகரிப்பை அளிக்காமல் இருந்தது. தற்போது அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரித்து 28% ஆகியுள்ளது. 

மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசும் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை அளித்து, அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், “மத்திய அரசு மற்றும் மற்ற மாநில அரசுகள் அறிவித்ததை போன்று தமிழகத்திலும் அகவிலைப்படி  (Dearness Allowance) உயர்வை அரசு அறிவிக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மதுரையில் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம், கொரோனா பேரிடரில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இன்னும் சில மாநில அரசுகளும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன. தமிழக அரசும் கொரோனா காலத்திலும் அயராது உழைத்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட தொழில் முடக்கம், நிதிச்சுமை ஆகியவை காரணமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பு நிறுத்தப்பட்டது. 

ALSO READ: 7th Pay Commission DA Hike: ரூ.95,000 வரை உயரும் சம்பளம், கணக்கீடு இதோ!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்திலும் (Tamil Nadu) அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி மீண்டும் வழங்கப்படும் என்றும், 17 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 28 சதவுகிதமாக உயர்த்தப்படும் என்றும் அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

எப்போது அறிவிப்பு வரும்?

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரு சில நாட்களில் வரக்கூடும் என சிலர் கூறி வந்தாலும், வரவிருக்கும் தமிழக பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அரசுக்கு எவ்வளவு செலவாகும்

அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால், சுமார் 18 இலட்சம் தமிழக அரசு ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    
ALSO READ: 7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்; விரைவில் முக்கிய அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News