Rahu peyarchi 2022: 3 ராசிக்காரர்களின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் ராகு கேது பெயர்ச்சி

Rahu Transit: ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசி செல்லும் ராகுவும் , விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு செல்லும் கேது பகவானும், இந்த காலகட்டத்தில் சிலரின் தெய்வ நம்பிக்கைகளை குறைப்பார்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2022, 08:41 AM IST
  • தெய்வ நம்பிக்கையை குறைக்கும் ராகு
  • திடீர் செலவு ஏற்படும் ராசிக்காரர்
  • பெற்றோருடன் தகராறை தவிர்க்க வேண்டிய ராசிக்காரர்
Rahu peyarchi 2022: 3 ராசிக்காரர்களின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் ராகு கேது பெயர்ச்சி title=

புதுடெல்லி: குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு மற்றும் கேது பெயர்ச்சியும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இந்த கிரகம் பங்குச்சந்தை, பயணங்கள், ஆன்மீக பயணங்கள், வெளிநாட்டு பயணம், தொற்றுநோய்கள், அரசியல் போன்றவற்றுடன் தொடர்புடையது.

ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதை ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம்.

2022ஆம் ஆண்டு  ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசி செல்கிறார்,  கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்.  இந்த ராகு கேது பெயர்ச்சியால் பாதிப்புக்கு உள்ளாகும் ராசிகள் இவை...

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி, எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 

சிம்மம்
தெய்வ நம்பிக்கை குறையும்
கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும்.

ஆனால், தெய்வ நம்பிக்கை குறையும். ஆனால் தெய்வத்திடம் சரணாகதி அடைந்தால், மலையாய் வரும் பிரச்சனைகள் மடுவாய்க் குறையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பெற்றோரின் உடல் நலனில் கவனமாக இருக்கவும். மருத்துவ செலவுகள் உண்டாகும். 

மேலும் படிக்க | ராகு பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றம்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் திடீர் செலவுகள் வரும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். 

ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். நோய் நொடிகளால் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருந்தால், பிரச்சனையை தவிர்க்கலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்யோகத்தில் தடைகள் நீங்கும். ஆனால், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும், குறிப்பாக பெற்றோருடன் முரண்படுவீர்கள். 

தெய்வ காரியங்கள் தடைப்படும். ஆனால், தெய்வ வழிபாடு பலன் தரும்.

மேலும் படிக்க | செல்வங்களை அள்ளி தரும் சுக்கிரனை வலுப்படுத்த செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News