மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart, சமீபத்தில் கொண்டு வந்த Big Billion Days சேலிற்குப் பிறகு, இப்போது மீண்டும் தீபாவளி சேலைக் கொண்டு வந்துள்ளது. இது Flipkart Big Diwali Sale ஆகும். இதில், மொபைல் ஃபோன்கள், டி.வி.க்கள் மற்றும் பல பொருட்களில் மீண்டும் பெரிய தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளுடன் ஷாப்பிங் செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த விற்பனை Flipkart.com-ல் அக்டோபர் 29 முதல் 2020 நவம்பர் 4 வரை வரும் இருக்கும்.
Sale-ல் இந்த வசதிகள் கிடைக்கும்
பிக் தீபாவளி விற்பனையில் No Cost EMI வசதி கிடைக்கும். இது தவிர, நீங்கள் Axis வங்கியின் (Axis Bank) க்ரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தினால், உங்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். SBI, ICICI வங்கி, Axis வங்கி, HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கும் No Cost EMI வசதி உண்டு. டெபிட் கார்டு EMI வசதியும் உங்களிடம் உள்ளது. இதில் உங்களுக்கு குறைந்தபட்ச இருப்பு கூட இருக்க வேண்டியதில்லை. நீங்கள் விரும்பினால், பஜாஜ் ஃபைனான்ஸுடன் கூடுதல் கட்டணம் இல்லாமல் EMI உடன் ஷாப்பிங் செய்யலாம்.
ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!
மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளில் சிறந்த தள்ளுபடிகள்
இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் சிறந்த தள்ளுபடியைப் பெற முடியும். உதாரணமாக, 20,990 ரூபாய் விற்கும் OPPO F15 ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ .14,990 க்கு வாங்கலாம். இது மட்டுமல்லாமல், ரூ .70 ஆயிரம் மதிப்புள்ள LG G8X ஸ்மார்ட்போனை வெறும் ரூ .24,990 க்கு வாங்கலாம். iPhone SE –ஐ வெறும் ரூ .32,999 க்கு வாங்கலாம். இதன் உண்மையான விலை 42,500 ரூபாய் ஆகும்.
80 சதவீதம் வரை தள்ளுபடி
சேலில் மின்னணு மற்றும் அக்சசரிசுகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை உள்ளது. இது தவிர, டிவி மற்றும் வீட்டு உபகரணங்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்களை வாங்க முடியும். ஃபேஷன் தயாரிப்புகளுக்கும் 50 முதல் 80 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, நீங்கள் தளபாடங்கள் மீது 75 சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம்.
இந்த சேலில் பல கவர்ச்சிகரமான டீல்களையும் நீங்கள் பெறலாம். விமான முன்பதிவில் கூட நீங்கள் லாபம் பெறலாம். இந்த சேலில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ப்ராடெக்டுகளும், 15 க்கும் மேற்பட்ட தனித்துவமான பிராண்டுகளும் தினமும் மிகச் சிறந்த டீல்களும் உங்களுக்காக காத்திருக்கின்றன.
ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR