மக்கள் தாங்கள் செய்யும் பணி நேர்த்தியாகவும் உயர் ரகமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.
இந்த முடிதிருத்துபவரும் (Barber) அதில் மிகவும் கவனம் செலுத்தும் நபராக இருக்கிறார். தனது வாடிக்கையாளருக்கு சரியான, அழகான தோற்றத்தை அளிப்பதில் இவர் காட்டும் அக்கறை அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. இவரது பாணியைப் பார்த்தால் நீங்கள் அதிர்ச்சியும் அடையலாம், உங்களுக்கு சிரிப்பும் வரலாம்.
வேடிக்கையான இந்த பார்பருடைய வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இவர் தனது வாடிக்கையாளருக்கு செய்யும் சிகை அலங்காரத்தை சரி பார்க்க, ஒவ்வொரு திசையிலும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு துள்ளித் துள்ளி குதிக்கிறார். இவரது ஆர்வத்திற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். ஒரு கட்டத்தில் ஆர்வத்தின் உச்சக்கட்டத்தில், தொலைவிலிருந்து ஹேர் கட் எப்படி உள்ளது என்று பார்க்க கடையை விட்டு வெளியே சென்று தொலைவிலிருந்து பார்க்கிறார். முன்னதாக, இந்த வீடியோ முதலில் தென் கரோலினாவைச் (South Carolina) சேர்ந்த ஹேர் சேலனின் பேஸ்புக் பக்கத்தில் அப்ஸ்கேல் கட்ஸான்ட்ஸ்டைலெசன் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பின்னர், அந்த வீடியோவை பிபி என்ற ட்விட்டர் பயனர் வெளியிட்டார், அதில் 'இந்த நபரைப் போன்ற அதிகமான முடிதிருத்தும் பணியாளர்கள் நமக்குத் தேவை' என்று தலைப்பிட்டுள்ளார்.
ALSO READ: WATCH: ஹிந்தி பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடி பட்டைய கிளப்பிய பாட்டிகள்...
இந்த முடி திருத்தும் பணியாளர், பேஸ்புக் (Facebook) மற்றும் ட்விட்டர் (Twitter) இரண்டிலும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். காண்பவர்கள் அனைவரையும் இந்த வீடியோ வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
We need more barbers like this guy pic.twitter.com/he4dhLMwlu
— (@rahm3sh) September 2, 2020
இதைக் காணும் அனைவரும் கருத்து பெட்டியில் GIF கள் மற்றும் ஈமோஜிகள் மூலம் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மைக்ரோ பிளாக்கிங் தளத்தில், இந்த வீடியோ 5.4 மில்லியன் வியூசைப் பெற்றுள்ளது. 110.8 ஆயிரம் ரீட்வீட்கள் மற்றும் 372.2 ஆயிரம் லைக்குகளையும் இந்த வீடியோ அள்ளியுள்ளது.
ALSO READ: உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் யோகா செய்யும் குரங்கின் வீடியோ!!