ஒரு மனிதன் தன்னைத் தொடுவதன் நோக்கம் பெண்ணுக்குத் தெரியும்: பம்பாய் உயர் நீதிமன்றம்

ஒரு ஆண் அவளைத் தொடும்போது அல்லது பார்க்கும்போது, ​​அவனுடைய நோக்கம் என்ன என்று அவளுக்குத் தெரியும் என பம்பாய் நீதிமன்றம் கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 3, 2020, 08:33 PM IST
ஒரு மனிதன் தன்னைத் தொடுவதன் நோக்கம் பெண்ணுக்குத் தெரியும்: பம்பாய் உயர் நீதிமன்றம் title=

மும்பை: முன்னாள் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பம்பாய் உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அதாவது அந்தப் பெண்ணுக்கு மற்ற விவகாரம் பற்றி குறித்து குறைவான அறிவுதிறன் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு ஆண் அவளைத் தொடும்போது அல்லது பார்க்கும்போது, ​​அவனுடைய நோக்கம் அவளுக்குத் தெரியும் என பம்பாய் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

41 வயது தொழிலதிபர் விகாஸ் சச்ச்தேவ்வுக்கு 2017 டிசம்பரில் விமானத்தில் பயணம் செய்த போது முன்னாள் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடைபெற்ற வழக்கை நீதிபதி பிருத்விராஜ் விசாரித்து தண்டனை வழங்கினார். அதில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து சச் தேவ் மேல்முறையீடு செய்தார். சச் தேவின் மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டதுடன். வழக்கின் விசாரணை முடியும் வரை அவரது தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. 

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 354 (ஒரு பெண் மீது தாக்குதல் அல்லது அவரது கற்பத்தை கலைக்கும் நோக்கத்துடன் குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்) மற்றும் சிறுவர் பாலியல் குற்றங்களைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் 2020 ஜனவரி 15 ஆம் தேதி அமர்வு நீதிமன்றம் விகாஸ் சச்ச்தேவ் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் மைனர் என்பதால், இந்த வழக்கில் சச்ச்தேவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது செஷன்ஸ் நீதிமன்றம் சச்தேவுக்கு ஜாமீன் வழங்கியது மற்றும் அவரது தண்டனையை மூன்று மாதங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. பிப்ரவரி 20 ம் தேதி உயர்நீதிமன்றத்தில் சச்தேவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, இன்று மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News