ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் சிவன் குகை கோயிலின் சூழலியலை பாதுகாக்கும் வகையில் அமைதி மண்டலமாக தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
ஒலி மாசு காரணமாக கோவிலுக்குள் மணி அடிக்க மற்றும் பக்தர்கள் சத்தமாக மந்திரங்கள் கூற தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம், அமர்நாத் குகைக்கோவில் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளது.
மேலும் பனி லிங்கத்தை பக்தர்கள் நன்கு பார்த்து வழிபடும் வகையில், பனிலிங்கத்திற்கு அருகில் உள்ள இரும்பு கம்பிகளை அகற்றுமாறும், பனிலிங்கம் உள்ள பகுதியில் ஒலி எழுப்ப அனுமதி இல்லை என்றும் ஒலி மாசுவை தடுக்கும் வகையில் கடைபிடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பனி லிங்கத்தை வழிபட வரும் பக்தர்கள் பனி லிங்கத்தை தடையின்றி தெளிவாக கண்டு வழிபட வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகளை செய்துதர வேண்டும் என கூறி இருக்கிறார்.