கொரோனா காரணமாக இந்தியாவில் காசநோய் உயிரிழப்புகள் 95,000 ஆக அதிகரிக்கும் என்று புதிய ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக 95,000 காசநோயாளிகள் உயிரிழக்க வழிவகுக்கும் என்று ஐரோப்பிய சுவாச இதழில் (ERJ) சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கணித்துள்ளது. இது குறித்து, இங்கிலாந்தின் லான்காஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்சுல் ஆப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் சார்பில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் காசநோய் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளதாவது.... "கொரோனா வைரஸ் தொற்றானது உலகளாவிய அளவில் காசநோயின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும். கொரோனா வைரஸ்க்கு முன் காசநோய் காரணமாக நாள் ஒன்றுக்கு 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக காசநோய் உயிரிழப்புக்கள் கூடுதலாக ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என கணிக்கபட்டுள்ளது.
READ | COVID-19-னை குணப்படுத்தும் என கூறப்பட்ட கொரோனில் மாத்திரை தடை செய்யப்படலாம்...
காசநோயை உண்டாக்கும் பாக்டீரியா கொரோனா வைரசை போன்று காற்றில் நீர்துளிகள் வழியா பரவுகின்றது. சமூக விலகலை கடைப்பிடித்தால் காசநோய் பாதிப்பை குறைக்கலாம். எனினும், இந்த சாத்தியமான காசநோய் பரவலை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகும் சுமார் 1,10,000-க்கும் மேற்பட்ட காசநோய் இறப்புக்கள் ஏற்படக்கூடும். கொரோனா காரணமாக சுகாதார சேவையில் ஏற்படும் மோசமான தாக்கமானது கூடுதலாக 2 லட்சம் உயிரிழப்புக்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. தற்போதைய தகவல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் நடவடிக்கைகளின் அடிப்படையில் சீனாவில் கூடுதலாக 6,000 காசநோய் மரணங்கள் ஏற்படும். இதேபோல் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 95,000 மற்றும் தென்னாப்பிரிக்காவில் 13,000 இறப்புக்களும் ஏற்படக்கூடும்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக காசநோய் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைதல், தாமதமாக நோயை கண்டறிதல் மற்றும் தாமதமாக சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஆகியவற்றின் காரணமாக இந்த உயிரிழப்புக்களானது நிகழலாம். குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் சுகாதார சேவைகளை பெரிதும் பாதிக்கச்செய்யும் எனவும் தெரிவித்துள்ளர்.