இன்றைய ராசிபலன், 18 மே 2021: உடல் ஆரோக்கியம் மேம்படும்

சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 18, 2021, 06:21 AM IST
  • வித்தியாசமான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும்
  • எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்
  • உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்
இன்றைய ராசிபலன், 18 மே 2021: உடல் ஆரோக்கியம் மேம்படும்

புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே... 

ராசிபலன்கள் : 18-05-2021

மேஷம்: உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் தோன்றும்.

ரிஷபம்: மனதில் தோன்றும் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்: கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் அகலும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

Also Read | Adi Shankaracharya Jayanti : இந்து மதத்தின் மாபெரும் சிற்பி ஆதி சங்கரரின் ஜெயந்தி 

கடகம்: ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மனதில் இருக்கும் கவலைகள் படிப்படியாக குறையும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வேலையாட்கள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.

சிம்மம்: உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். அவ்வப்போது மனதில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

கன்னி: பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் மேன்மை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கும் திறமைகள் மேம்படும். எளிமையான செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடைவதற்கான சிந்தனைகளும், முயற்சிகளும் உண்டாகும்.

Also Read | தமிழ் பஞ்சாங்கம் 18 மே, 2021: செவ்வாய்க்கிழமை இன்றைய நல்ல நேரம்

துலாம்: உலகியல் நடைமுறைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். மனதில் புதிய தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். மறைந்திருந்த சில விஷயங்களை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும்.

விருச்சகம்: ஆன்மிகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் பொருளாதாரம் மேம்படும். விவேகமாக செயல்பட்டு அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.

தனுசு: மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உணவு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து சிந்தித்து செயல்படவும். சகோதரர்களின் செயல்பாடுகள் மூலம் சிறு சிறு கருத்து வேறுபாடுகளும், மனவருத்தங்களும் உண்டாகும்.

Also Read | வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு  நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?

மகரம்: வெளியூர் தொடர்பான பயணங்கள் மற்றும் கல்வி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று சிந்தித்து செயல்படவும்.

கும்பம்: உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்ப்புகளால் ஆதாயமான சூழ்நிலைகள் சிலருக்கு அமையும். மனதிற்கு விருப்பமானவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் புதிய முதலீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும்.

மீனம்: செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை அளிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உதவிகள் சாதகமா

Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News